Posts

Showing posts from August, 2024

கருவறை கீதம் -23

Image
  அத்தியாயம் 23 “மீ ட் அவர் சித்திப்பாட்டி.” என்ற அவினாஷ், காமாட்சியிடம் சொன்னான். “பாட்டி, திஸ் இஸ் அக்னிஸ்வரூப்! பிரகதியோட அண்ணன்.” அவரை வணங்கிய அக்னியை, மூக்குக் கண்ணாடியைச் சரி செய்தபடி அளக்கும் பார்வைப் பார்த்தார் காமாட்சி. அக்னிக்கு உள்ளே அடித்துக்கொண்டது. எங்கே அனுவைப் போல், சந்தனாவைப் போல் இவரும் தன்னை அடையாளம் காண முயல்வாரோ என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது. ஆனால் தள்ளாமையிலும் உடல்நல பழுதிலும், நினைவாற்றலும் பார்வையும் மங்கியிருந்த காமாட்சிக்கு பாஸ்கரனின் கண்கள் எல்லாம் எங்கே நினைவிருக்கப் போகிறது? ஆகையால் மரியாதை நிமித்தம் தன்னை நமஸ்கரித்த அக்னியைத் தானும் வணங்கி, பொய்ப் பற்கள் தெரிய சிரித்தார். “ராஜா கணக்கா இருக்கீங்க தம்பி!” ‘ஆமாம்டா கண்ணா, சாக்கடைல தவறி விழுந்த உன்னைத் தூக்கி குளிப்பாட்டி, சந்தனம் பூசி வாசமா வச்சிக்க நினைக்கறா உங்கம்மா’  பல்லைக் கடித்துக்கொண்டு சின்னதாய்ப் புன்னகைத்தான். “சாப்பிட போங்க பாட்டி.”  அதிக அலைச்சல் ஆகாத காமாட்சியின் உடல்நிலையின் பொருட்டு, அவரை இன்றுதான் அழைத்து வந்திருந்தான் பாஸ்கரன். மூளை சிறிதும் ஓய்வில்லாமல் தவித்திருத்த நிலையில், அவரின் வருகை இ

கருவறை கீதம் -22

Image
  அத்தியாயம் 22 “ஆ வ்! விடுங்கத்தான் வலிக்குது.” “உண்மையைச் சொல்லுடி! அந்த ஃப்ராடுங்க கூட சேர்ந்து என்ன பண்ணி வச்சிருக்கே?” என்ற அக்னிஸ்வரூபன் பாவனாவின் காதைப் பிடித்து திருகிக் கொண்டிருந்தான். “அது‌… அது… எப்டி கண்டுபிடிச்சீங்க அத்தான்?” என்ற பாவனா முகம் வெட்கத்தை வெளிப்படுத்துவதைக் கேலியாக பார்த்தான். வசுதாவின் குடும்பத்தினர் அன்று காலையில்தான் சென்னை வந்திருந்தனர். கண்ணனின் நீதிமன்ற வழக்குகள், வசுதாவின் கல்லூரி வேலைகளின் பொருட்டு அவர்கள் இரண்டு நாட்கள் கழித்து வருவதாகச் சொல்ல, பிரபஞ்சன் வீட்டினர் மட்டும் முன்பே வந்திருந்தனர். காலையில் பல் விளக்கியதுமே பாவனாவின் அறையில்தான் போய் நின்றான் இவன். இயல்பு போல் அவளின் அலைபேசியைக் கேட்டு வாங்கி அழைப்பு பட்டியலைப் பார்த்திருந்தான். இவன் சந்தேகப்பட்டது சரிதான் என்பதைப் போல் சற்று முன்னர்தான் அர்ஜூனிடம் பேசியிருந்தாள் இவள்.   “எல்லாம் எனக்கு தெரியும். பதில் சொல்றியா? இல்ல உங்கப்பாகிட்ட போட்டு கொடுக்கவா?” “முதல்ல காதை விடுங்க! பிச்சு தனியா எடுத்துவீங்க போல!” என்றவள் அவன் கையைத் தட்டிவிட்டு காதைத் தேய்த்துக்கொண்டாள். “அதான் எல்லாம் தெரியும்ன்னு

கருவறை கீதம் -21

Image
  அத்தியாயம் 21 அ க்னி அவினாஷூடன் சில ரெடிமேட் உடைகளுக்காக ‘பர்சேஸிங்’ சென்றிருக்க, மதிய உணவு முடிந்து பிரபஞ்சன் அவன் தலைமுறை ஆண்களுடனும், பெண்கள் கூட்டணி ஒருபுறமும் ஐக்கியமாகியிருந்தனர்.  காலையில் அக்னி மாடியில் அமர்ந்திருந்த அதே இடத்தில் தற்போது பிரகதி இருந்தாள். நிர்மலாவின் கொழுந்தன் ரமேஷின் பிள்ளைகள் இருவருடன் கேரம் விளையாடிக் கொண்டிருந்தாள். அர்ஜூன் வந்து மற்ற இருவரையும் கிளப்பிவிட்டான். “அந்த ரூம்ல விர்ச்சுவல் கேம்ஸ் கேட்ஜெட்ஸ் இருக்குது.”  “வாவ்!” என்று இரண்டும் எழுந்து ஓட, தன் தோள் மீது விழுந்த கரத்தை ஆச்சரியமாகப் பார்த்தாள் பிரகதி.  “ஹாய் அண்ணி!” -சந்தனா. ‘அண்ணியா?’ மயக்கம் மயக்கமாக வந்தது இவளுக்கு. அந்த மயக்கத்தினூடே தயக்கமாக, “சீனியர்…” என்றதில் பக்கென சிரித்திருந்தான் அர்ஜூன். அவன் தலையில் தட்டிவிட்டு, பிரகதியிடம், “இன்னுமென்ன சீனியர்? சனா’ன்னு கூப்பிடு.” என்றபடி அமர, அவளிடம் தலையசைப்பு மட்டும்! அர்ஜூன் அவளெதிரே இருந்த இடத்தை ஆக்ரமித்துக் கொண்டு சொன்னான். “யம்மா! எதுக்கு இப்டி எல்கேஜி பொண்ணு மாதிரி முழிக்கற? அவ உன்னை ஒண்ணும் பண்ணமாட்டா! ஜஸ்ட் பீ ஃப்ரெண்ட்லி!” பின்னரே கொஞ்சம

கருவறை கீதம் -20

Image
  அத்தியாயம் 20 இனி 2034’இல் மட்டுமே கதைப் பயணிக்கும். ஒ ரு இதயம்தானே இருக்கிறது! இறைவன் இன்னும் நான்கைத் தந்திருக்கக்கூடாதா? நிர்மலாவின் அழைப்பின் பேரில் அன்று காலையில் அவினாஷ் வீட்டிற்கு பிரபஞ்சன் குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர். கல்யாண வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இவர்களுக்காக ஒரு சிறிய ‘கெட் டூகெதர்’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒருநாள் முழுவதும் இங்கேதான்! இவர்கள் கார் போய் நிற்கவும், இளநீல டிஸைனர் புடவையும் பொருத்தமானப் பெரிய காதணியும் வெற்றுக் கழுத்தும் தெற்றுப்பல் சிரிப்புமாய் முதல் ஆளாக வந்து நின்றாள் சந்தனா! நடையில் ஓர் துள்ளல்!  அவினாஷ் வீடு புது டிஸ்டெம்பரும் பூத் தோரணங்களும் எனக் கல்யாணத்திற்கு தயாராகியிருந்தது. அவன் தங்கையும் புதுப் பூவைப் போலவே வந்து நின்றாள். அவளைப் பூட்டத் தான் ஒற்றை இதயம் போதாத அக்னிக்கு நான்கிதயங்கள் வேண்டுமாம்! “ஹாய் யங் லேடி! வாங்க அங்கிள், ஆன்ட்டி, ஹாய் பிரகதி!” என உற்சாக வரவேற்பு தந்தாள். “அவ நாம வாங்கிக் கொடுத்த செயினைப் போடலை பாரு!” என்று அபிராமி மருமகளின் காதைக் கடிக்க, “அதெல்லாம் நாம எதிர்பார்க்கக் கூடாதில்ல அத்தை?” என்று