கருவறை கீதம் -27


 

அத்தியாயம் 27


ப்படி எங்கள் சஞ்சுவைப் போலவே மாறி நின்றாய் என்ற சந்தனாவின் கேள்வியில், ஒரு விநாடியைத் திகைப்பிற்கு தந்துவிட்டு, இவள் சற்று யோசித்தாலும் உண்மையைக் கண்டுகொள்வாள் என எச்சரிக்கை ஆனவன் எதையாவது கேட்டு அவளைத் திசை திருப்ப நினைத்து அந்த கேள்வியைக் கேட்க, அது அவனுக்கே ஆப்படித்துவிட்டது.


“ஜஸ்ட் சும்மா பேசினேன். இப்போ எல்லாம் சரொகஸி சகஜமாகிடுச்சுல்ல?”


“அப்ஸொல்யூட்லி! நானே கூட சரகஸியை அப்ரோச் பண்ணுவேன்.” என்றவள் தோள் குலுக்க,


சடாரென பிரேக்கை அழுத்தியிருந்தவன், “என் குழந்த…” என்று சுயம் மறந்து சொல்லிவிட்டு, “காட்!” என இடக்கையால் நெற்றியைத் தேய்த்துக்கொண்டான்.


அவன் புஜத்தைப் பிடித்து அசைத்தாள் சந்தனா. “அக்னி, என்னாச்சு? காரை எடுங்க! பின்னாடி ஹார்ன் அடிக்கறாங்க பாருங்க!” 


நல்லவேளை அதிக வேகத்தில் வராததால் தப்பித்தார்கள். பின் காரைச் செலுத்தி ஓரமாக நிறுத்தியவன், “ட்டூ மினிட்ஸ்!” என விருட்டென இறங்கியிருந்தான்.


அவனுக்கு தன்னை நிலைப்படுத்த வேண்டியிருந்தது. பின்மதிய நேர சென்னையின் சாலைகள் பரபரப்பாக ஊர்ந்து கொண்டிருந்தது. சற்று தள்ளியிருந்த மளிகைக் கடையில் சிகரெட் வாங்கி பற்ற வைத்துக்கொண்டு, முடியும் மட்டும் புகையை நுரையீரலுக்குள் கைது செய்து, அதே வேகத்தில் விடுதலை செய்தான்.


‘அக்னி, ஆர் யூ அவுட் ஆஃப் மைண்ட்?’ எனத் தன்னையே நிந்தித்தான்.


கிட்டத்தட்ட இரு மாதங்களுக்கும் மேலாக தனக்குள் ஏற்படும் உணர்வு கொந்தளிப்பிற்கு தானே தலைவனாக இருந்து அவற்றை அடக்கி வைத்திருக்கும் நிலையில், இன்று அந்த உணர்வுகள் அவனையே வென்றுவிட பார்த்ததே! 


ஆம்! இன்று தாத்தாவைப் பார்த்ததும், அம்மா அனுபவித்த துயரங்களைக் கேட்டதும், இப்போது சந்தனாவின் கூற்றும் சேர்ந்து அவனை முற்றிலும் சுயம் மறக்கத்தான் வைத்துவிட்டன. கூடவே அவள் ‘சஞ்சுத்தான், சஞ்சுத்தான்’ எனும் பொழுது ஜிவ்வென்றிருந்து தொலைக்கிறது.


விளைவாக, ‘என் குழந்தையை நீ சுமக்கமாட்டாயா?’ என்று கேட்க வந்திருந்தான்.


“ஷிட்! ஷிட்! ஷிட்!” புகையை வேகவேகமாக வெளியிட்டான்.


அவன் அப்படி கேட்க வந்ததற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று அவன் சிறு வயதில் அனுபவித்த துன்புறுத்தல்கள் அவனுக்குள் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தால், தன்னைப் போல் இன்னொரு குழந்தைப் பரிதாபகரமான நிலையில் நின்றுவிடக் கூடாது என்ற எண்ணம்!


மற்றொன்று சந்தனா! எப்படி அவளிடம், ‘என் குழந்தையை நீ சுமக்கமாட்டாயா?’ என்று கேட்க துணிந்தான்? கேட்டிருந்தால் அவள் தன் மீது வைத்திருக்கும் மரியாதை என்னத்திற்காவது?


“ஃ**!” மீண்டும் முகம் தெரியாத அளவிற்கு புகை வளையம்.


அத்தனை தூரத்திற்கா அவளை மனதினுள் மனைவியாக வரித்து வைத்திருக்கிறான்? உள்ளத்தில் நிலைத்திருந்தவள் எப்போது அவன் உணர்வோடு கலந்தாள்? இருக்கும் பிரச்சினை போதாதென்று இவன் மனமும் இவனுக்கெதிராகவே சதி செய்கிறதே!


‘அடியே மாரியாத்தா! தெற்றுப்பல்காரி! அர்ஜூன் சொன்னான்னு உன்கிட்ட நான் பேச வந்திருக்கவே கூடாது.’


சந்தனா அவனைக் கவலையும் கேள்வியுமாக பார்த்தபடி காரிலிருந்து இறங்கி வந்தாள்.


“ஸ்வரூப்?” என்று கேள்வியாக அவனையும் அவன் கையிலிருந்த சிகரெட்டையும் பார்த்தாள்.


மரியாதை தூரத்தில் நின்று வார்த்தையுமில்லாமல் வெறுமனே பார்க்கின்றாள். அக்னிக்கு எரிச்சலாக இருந்தது.

இந்நேரம் தன்னிடத்தில் அர்ஜூன் இருந்திருந்தால், தலையில் நான்கு போட்டு சிகரெட் பிடித்த விரல்களை நசுக்கியிருப்பாள் அல்லவா?


‘உன் மரியாதை யாருக்கு வேணும்? போடி!’


‘டேய் டேய் உனக்கு என்ன தாண்டா வேணும்?’ என‌ அவன் மனசாட்சியே கதற ஆரம்பித்துவிட்டது.


“நத்திங்! ரொம்ப சீரியஸா போகுது இந்த டாபிக்! எங்கேயாவது போய் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு அப்புறம் மண்டபம் போகலாமா?” என சிகரெட்டைக் கீழே வீசி, ஷூ காலால் அதன் தலையை நசுக்கினான்.


“ஸாரி! ஏற்கனவே கல்யாண வேலைல உங்களுக்கு நிறைய டென்ஷன் இருக்கும். நான் வேற… சரி, எங்கே போகலாம்?”


“எங்கேயாவது… உங்க ஊரை உனக்குதானே தெரியும்?”


“ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?” என்று பக்கத்திலிருந்த ஐஸ்கிரீம் பார்லரைக் கைக் காட்டி கேட்க,


திரும்பிப் பார்த்தவனுக்கு இறங்கிய அழுத்தம் மீண்டும் ஏறிக்கொண்டது. அங்கே கடையின் வெளியே இருந்த விளம்பர பலகையில் ஒரு குழந்தை கைக்கு ஒன்றாய் ஐஸ்கிரீம்களை வைத்துக்கொண்டு, தன் சின்னப் பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்தது. அருகே ‘Arun Icecreams’ என்ற வாசகம்.


என்ன தான் அர்ஜூன் மூலமாக தற்போது அருண் யாரென்று (?) தெரிந்துவிட்டாலும், சந்தனாவை சந்தித்த நாள் முதல் கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக அருண் என்ற பெயர் இவன் தலைக்குள் ஏற்படுத்தியிருந்த குடைச்சலின் தாக்கம் இன்னமும் குறையவில்லேயே! இனியும் அந்த நமைச்சல் போகாது என்றே தோன்றியது.


“இங்கே ரொம்ப கூட்டமா தெரியுதே!”


“ஹோ! அப்போ *** ரோட் போயிடலாம். அங்கே ஃப்ரீயா இருக்கும்.” என்று குதூகலித்தவளாய் காரில் ஏறிக்கொள்ள,


‘அந்த கடங்காரன் கடைல மட்டும் நிறுத்தவே மாட்டேன்.’ என்று சங்கல்பம் செய்து கொண்டவனாய் அவளைத் தொடர்ந்தான் இவன்.


நினைத்ததைப் போல் அவள் சொன்ன இடத்தில் நிற்கவே இல்லை‌. “இங்கே வேணாம். வேற கடைப் பார்க்கலாம்.”


“ஏன்?”


“என்னவோ இந்த அட்மாஸ்ஃபியர் பிடிக்கல.”


வழிநெடுக இருவருக்கும் எந்த கடையில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது என்கிற தர்க்கமே!


“இங்கே?” -அவள்.


“நோ!” - அவன்.


“ஏன்?”


“ஏசி இல்லை.”


“இங்கே?” -அவன்.


“நோ! ஐ வான்ட் அருண்!” - அவள்.


“இங்கே?” -அவன்.


“நோ! நமத்துப் போன கோன்ல கொழ கொழன்னு கோக் வடிஞ்சாப்புல வச்சிருப்பான்.”


“ஏன்? *** நல்ல ப்ராண்ட் தானே?”


“நோ! எனக்கு அருண்தான் வேணும். அருணுக்கு தான் சந்தனான்னு எழுதி கொடுத்திருக்கேன்.”


அன்று சொன்ன அதே வார்த்தைகள்! அக்னி தந்த அழுத்தத்தில் ஸ்டியரிங் வீல் வீக்கம் கண்டது. மனதில் அப்படியோர் எரிச்சல் மண்டியது.

 இவனை அலைக்கழித்ததாலேயே அந்த நிறுவன ஐஸ்கிரீமின் மேல் பெரும் வெறுப்பை வளர்த்துக்கொண்டது இந்த நெருப்பு!


கடைசியாக ஐபாகோவில் போய் நின்றார்கள். அதற்காக சந்தனா பெரிதாக அலட்டிக் கொள்ளாததில் ஆச்சரியமாக பார்த்தான். “இது மட்டும் ஓகேவா உனக்கு?”


“என்ன ஸ்வரூப்? இவ்ளோ பெரிய பிஸினஸ் காந்தமா இருந்துக்கிட்டு ஒரு சின்ன பேஸிக் நாலெட்ஜ் கூட இல்லாம இருக்கீங்க?”


“ஏய்…”


அவன் பல்லைக் கடித்ததில் இவளுக்கு சிரிப்பு வந்தது. “ஐபாகோ, அருண் ரெண்டும் ஸேம் கம்பெனிதான்! ஐ மீன் ரெண்டுக்கும் ஒரே சேர்மன்தான். ஆஸ் ஃபார் மீ, அருண் எனக்கு மாமான்னா ஐபாகோ மச்சான்.” என்று கண்மூடி நாக்கை நீட்டி அழகு காண்பித்து, வரிசையில் நிற்காத பற்கள் தெரிய சிரித்தாள்.


அவள் அழகில் மயங்கி நின்றவனை, “அட வாங்க சர்!” என்று‌ கைப்பிடித்து இழுத்துச் செல்ல, அக்னிக்கு மேகத்தில் நடப்பதைப் போலிருந்தது.


ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான மனித உரு கொண்ட ரோபோட் சலாம் வைத்து கதவைத் திறந்துவிட்டது.


உள்ளே போய் அமரும் முன், அருணின்(?) வரலாற்றையே ஒப்பித்திருந்தாள் சந்தனா. “இங்கே நமக்கு விருப்பமான ஃப்ளேவர்ஸ் அண்ட் டாப்பிங்ஸ்ன்னு செமயா இருக்கும்.” என்றபடி தனக்கு தேவையானதைச் சொல்லிவிட்டு, அவனைப் பார்த்தாள்.


“எனக்கு வேணாம்.”


தோள் குலுக்கிவிட்டு போய் அமர்ந்துகொண்டாள். “அடிச்ச தம்மே திம்முன்னு இருக்குது போல…”


“ஹோய்! நான் ஒண்ணும் எப்போவும் தம்மடிக்கறதில்லை. வாழ்க்கைல இது ரெண்டாவது முறை!”


“இன்ட்ரஸ்ட்டிங்! ஃபர்ஸ்ட் டைம் எப்போ?” 


“காலேஜ்ல பசங்க டிரைப் பண்ணும்போது நானும் அவனுங்களோட சேர்ந்து அடிச்சிருக்கேன்‌.”


“நிஜமாவா? நீங்க இழுத்ததைப் பார்த்து செயின் ஸ்மோக்கர்ன்னு நினைச்சேன் தெரியுமா? தம்மடிக்கறப்போ யூ ஆர் க்ளாஷி அண்ட் ஸ்டைலிஷ், ஸ்வரூப்!” அவளின் வெளிப்படையான புகழ்ச்சியில் இவனிடம் ஓர் வசீகரப் புன்சிரிப்பு!


அதனை இமைக்காமல் பார்த்தவள், “சரகஸி பிடிக்காதா? சிகரெட்டைத் தேடறளவுக்கு டென்ஷன் ஆகிட்டீங்க?” எனக் கேட்டதில், 


அவன் புன்னகை வடிந்துவிட்டது. “அப்டிலாம் ஒண்ணுமில்லை.”


அவன் தன்னிடம் பகிர விரும்பவில்லை என்று புரிய, அதற்கு மேல் அவனை வற்புறுத்தாமல் வேறு பேசினாள்.


அர்ஜூன் இவனை அவசரப்படுத்தியது நினைவு வந்தது. இன்று தான் இவனிடம் நட்பு ரீதியாக பேசுகிறாள். அதற்குள் உச்சந்தலையில் அடித்தாற் போல் காதலை வெளிப்படுத்தினால் இவனைத் துச்சமாக நினைக்கமாட்டாளா? இவனுக்குமே இது பிடிக்கவில்லை. அதிலும் அவளுக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் இருக்கிறான் என்று தெரிந்தும்…


ஆனால் வேறு வழியும் இல்லையே!


எதற்கும் மீண்டும் ஒருமுறை அர்ஜூனிடம் பேசிப் பார்க்கலாம் என நினைத்தவன், அவளிடம் முக்கியமான அழைப்பு என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து, தம்பிக்கு அழைத்தான். “அர்ஜூன்.”


“அய்யய்ய… இந்த நாட்டுல ஒரு‌ மனுஷனை நிம்மதியா லவ் பண்ண விட மாட்றானுங்கப்பா…” என்று சலித்தபடி தான் ஆரம்பித்தான் அவன். பின்னால், “அர்ஜூன்.” என்ற பாவனாவின் குரலில் இவனுக்கு பதறியது.


“ஏய்! என்னடா பண்ற அவளை?”


“அப்டியே பண்ணிட்டாலும்… கொஞ்சமும் கோ-ஆபரேட் பண்ண மாட்றா! எதுக்கெடுத்தாலும் அத்தான்… சட்டைப் பொத்தான்னு உன்னைத்தான் சொல்றா! என்ன வளர்த்து வச்சிருக்க புள்ளையை?”


“அர்ஜூன்ன்!!” என்ற இவனின் சீற்றத்தில் மறுமுனை சற்றே அடங்கியது.


“நோ நீட் ட்டூ ஓவர் இமாஜின்! அக்கா பொண்ணு, அண்ணி பொண்ணுன்னு அரை டிக்கெட்டுங்களோட சுத்திட்டிருந்தவளை இப்போதான் அம்மாவுக்கு இன்ட்ரோ குடுக்க கூட்டிட்டு போயிட்டிருக்கேன்.”


இவனின் கோபம் சற்றே வடிந்தது. இருந்தும் இறுக்கமாகவே இருந்தான்.


அர்ஜூனே கேட்டான். “நான் சொன்னது என்னாச்சு? சனா கிட்ட கல்யாணம் பத்தி பேசிட்டியா?”


“நீ ஏன் இவ்ளோ அவசரப்படறன்னு தெரியல. எனக்கு இது கொஞ்சமும் பிடிக்கலை அர்ஜூன். அவ ஒத்துக்கலைன்னா?”


“ஸீ மிஸ்டர் சஞ்சய் பாஸ்கர்! உனக்கு எப்டி பாவனாவோ அப்டித்தான் எனக்கு என் சனா! அவளை எனக்குத் தெரியும்; அவளுக்கு எது நல்லதுன்னும் எனக்குத் தெரியும். இப்போ நீ அவக்கிட்ட பேசி சம்மதம் வாங்கல… நீதான் சஞ்சுன்னு மொத்த எவிடென்ஸோட அவி அத்தான் கிட்ட சொல்லுவேன். அத்தான் நம்ம அம்மாவுக்காக கல்யாணத்தை நிறுத்தற எக்ஸ்ட்ரீமுக்கும் போவார். மோர்ஓவர் குழந்தை கடத்தல்ன்னு பிரபஞ்சன் அங்கிள் மேல நான் கேஸ் ஃபைல் பண்ணுவேன்.”


“ஷிட்! யூ ஆர் ஓவர் டூயிங் அர்ஜூன். நான் சந்தனா கிட்ட பேசறேன். இந்த ஜென்மத்துல எனக்கு அவ தான் பொண்டாட்டின்னு உனக்கு ப்ராமிஸ் பண்றேன். ஆனா கொஞ்சம் டைம் கொடுடா!”


“ஆல்ரெடி இருபத்திரெண்டு வருஷம் டைம் போயிடுச்சு. இனியொரு நிமிஷம் கூட என்னால வெய்ட் பண்ண முடியாது.”


“லிஸன் அர்ஜூன்! நாலஞ்சு மாசம் முன்னாடி நான் சந்தனாவை பேங்களூர்லயே பார்த்திருக்கேன். அப்போவே அவளைப் பிடிச்சது. இந்தப் பிரச்சினையெல்லாம் முடிஞ்சிட்டா நானே…”


“புது டிராமாவா மிஸ்டர் சஞ்சய்?”


“டேய்… உண்மைடா! ஷீ ஹேஸ் மை ஹார்ட்!”


“அப்போ அதை இப்போவே அவக்கிட்ட சொல்லு!”


“ஃ**! நீ பண்ற வேலைக்கு பேர் என்னன்னு தெரியுமாடா?”


அண்ணனின் தகாத வார்த்தையிலும் பாதிக்கப்படாதவன், “ஜஸ்ஸ்ட்ட்… ஐ டோண்ட் பாதர் அபௌட் தட்!” எனப் பட்டென்று அழைப்பைத் துண்டித்திருந்தான்.


ஏன் இத்துணைக் கோபமும் அவசரமும் என்று இவனுக்கு புரியவில்லை. தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மீண்டும் கடையினுள் நுழைய, அப்போதுதான் வந்திருந்த ஐஸ்கிரீமைச் சுவைத்துக் கொண்டிருந்தாள் சந்தனா.


ஈரம் அப்பிய உதடுகளும் ஏறி இறங்கும் தொண்டையும் வெற்றுக் கழுத்தும் வழக்கம்போல் இவனுக்குள் ரசவாதம் செய்ய, இதே உணர்வு அவளுக்கும் தன்னிடத்தில் இருந்தால் காதலைச் சொல்ல இத்துணை சிந்தனை தேவையில்லை என்றே தோன்றியது.


இப்படி ஒரு பெண்ணிடம் எந்தவொரு முகவுரையுமில்லாமல் ‘திருமணம் செய்து கொள்ளலாமா?’ எனக் கேட்கும் இக்கட்டான நிலைமை தனக்கு வருமென்று அக்னி கனவிலும் நினைத்திருக்கவில்லை.


‘அர்ஜூன் எனும் அரக்கன் குறுக்கே வராமல் இருந்திருக்கலாம்.’ சிந்தனை ஒருபுறமிருக்க, இருக்கையில் அமர்ந்தவன் கை நீட்டி அவளின் கிண்ணத்தைத் தன்புறம் இழுத்து ஐஸ்கிரீமைச் சுவைத்தான்.


சந்தனாவைப் பொருத்தவரையில் அக்னியின் மீதிருக்கும் மதிப்பில், தாத்தாவிடம் அவன் நடந்துகொண்ட முறைமையின் அடிப்படையில் தான் அவனிடம் தங்கள் குடும்ப காரியங்களைப் பகிர்ந்துக் கொண்டிருக்கிறாள். 


இப்போது அவனிடத்தில் அர்ஜூனோ அல்லது ஜோஜூவோ இருந்திருந்தால் வேறு! ஆனால் அவர்களிடம் போல் ஐஸ்கிரீமைப் பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு அக்னியை இன்னும் அவள் நெருங்கிய நட்புப் பட்டியலில் இணைக்கவில்லை. 


ஆக, ‘இதென்ன அநாகரீகம்!’ என்று திகைத்த சந்தனாவின் அறிவு, ‘அக்னிஸ்வரூப் அப்படிப்பட்டவனில்லையே!’ என்று சொன்னது.


“உங்களுக்கு வேணும்னா வேற ஆர்டர் பண்ணுங்களேன்?” முயன்று நிதானமாகக் கேட்டாள்.


“நீ எப்டி அருணுக்கு சந்தனான்னு எழுதி கொடுத்திருக்கியோ, அதே மாதிரி சந்தனாவுக்கு அக்னிஸ்வரூப்ன்னு எழுதி கொடுக்கலாம்ன்னு நினைக்கறேன்.” என்று அவளின் கண்ணோடு கண் பார்த்து கேட்டேவிட்டான். 


‘தயவுசெஞ்சு என்னைத் தப்பா புரிஞ்சுக்காதேடி!’ எனும் தவிப்போடு அவள் பதிலை எதிர்நோக்கியிருந்தான். முகம் அமைதியாக தெரிந்தாலும் இதயம் மேல் பஞ்சமத்தில் தாளமிட்டது.


முதலில் அவன் சொன்னது புரியாமல் விழித்து‍ பின் புரிந்து, திகைத்து, சில நொடிகள் இருந்த நிலையிலேயே சமைந்துவிட்டாள் சந்தனமாரி.


“சந்தனா… ஸே சம்திங் மேன்!” 


இன்னும் சில நிமிடங்களானால் இவன் இதயம் இன்னும் பத்திரமாக தான் இருக்கிறதா என்று சோதித்தறிய வேண்டும். 


‘மாரியாத்தா! ஏண்டி இப்டி முழிக்கற? எதையாவது சொல்லித் தொலையேன்!’ ஆனால் அவள் அடுத்து கேட்ட கேள்வியில் இவன் இதயம் நின்றேவிட்டது. 


“ஓ மேன்!” என்று வெளிப்படையாகவே நெற்றியில் கை வைத்து நொந்துகொண்டான்.


இசைக்கும்...

Comments

  1. Appidi enna ketruppa? Ayyo seekiram adutha update podungalen author ji!

    ReplyDelete
  2. ஒருவேளை 'நீங்க என்னோட சஞ்சுத்தான் தான' அப்டினு கேட்ருப்பாளோ? 🤔

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25