கருவறை கீதம் -28.2

 


அத்தியாயம் 28.2


அக்னி பிரமித்துப் போய் அமர்ந்திருந்தான். அவள் சஞ்சுவின் மனைவி என்ற போது மகிழ முடியவில்லை. எனக்காக இத்தனை வருடங்கள் இவள் காத்திருக்கிறாள் என்று புளங்காகிதமடைய முடியவில்லை. மாறாக கலியபெருமாள், அனு, அர்ஜூன், நிர்மலா என அனைவரின் மீதும் பொல்லாத கோபம் வந்தது. கலியபெருமாள் இவன் மேல் நடத்திய துன்புறுத்தல் ஒருவிதம் என்றால், சின்னப் பெண்ணான சந்தனாவிடம் சஞ்சுவின் எண்ணங்களை விதைத்ததும் ஒருவித கொடுமை என்றே நினைத்தான். இதில் அனுவும் தன்னை அறியாமலேயே சம்பந்தப்பட்டிருப்பதில் இவனுக்கு ஆற்றாமை பொங்கியது.


அர்ஜூன், ‘வேறு மாப்பிள்ளை, டிராமா’ என்றதன் அர்த்தமும் இப்போது புரிந்தது. 


“இதனால தான் அர்ஜூன் உன்னை அண்ணின்னு கூப்பிடறானா?”


“ஹாஹா… அவனுக்கு ஏதாவது வேலை ஆகணும்னா என்கிட்ட தான் வருவான். அப்போ நான்தான் சொல்லுவேன், அண்ணின்னு கூப்பிட்டா ஹெல்ப் பண்றேன்னு!”


சந்தனா அர்ஜூனை விட நான்கு மாதங்கள் சிறியவள்! இருப்பினும் அவளின் ஆணையின் பேரில் தனக்கு காரியம் ஆகவேண்டும் என்ற சமயங்களில், அவள் கோபமாக இருக்கும்போது என சிற்சில நேரங்களில் அவன் அவ்வாறே அழைக்கின்றான். 


“இன்னும் ரெண்டு, மூணு வாரத்துல சஞ்சுவைக் கண்டுபிடிச்சிடுவேன்னு அவி அண்ணா சொல்லிருக்கான். வெய்ட்டிங் ஃபார் தட் த்ரில்லிங் மொமண்ட்!” என்றவளை அக்னி அமைதியாகப் பார்க்க, 


“என்னாச்சு? என் லவ் வொர்த்தா இல்லையா?” எனக் கேட்டாள்.


“இதுக்கு பேரு லவ்வா’டீ?” என்று பல்லைக் கடிக்க,


உருகியிருந்த ஐஸ்கிரீமை அவன் தலையில் கவிழ்த்துவிடும் ஆத்திரத்தில் முறைத்தாள் அவள்.


“பக்கா கிறுக்குத்தனம்! வீட்டுப் பெரியவங்க எல்லாருமா சேர்ந்து அவங்களோட ஆசை, வீண் பிடிவாதம், கௌரவத்துக்காக பசங்க வாழ்க்கையை நல்லா கெடுத்து வச்சிருக்காங்க!” அவன் கோபம் குறைவதாக இல்லை.


இன்றில்லை என்றாலும் என்றாவது ஒருநாள் பிரகதி மூலமாக அக்னிக்கு தங்கள் குடும்பத்தை, குடும்ப நபர்களைப் பற்றி தெரிய தான் போகிறது. எனவே உறவினன் என்ற முறையிலும் அவளுக்கு அவன்‌மேல் இருக்கும் மதிப்பிலும் தங்கள் குடும்ப சங்கதிகளைப் பகிர்ந்தாள் சந்தனா. ஆனால் அவன் தங்கள் வீட்டுப் பெரியவர்களை விமர்சிப்பதை அவள் விரும்பவில்லை. 


“நாங்க நல்லாதான் இருக்கோம் அக்னி. அவங்களோட பிள்ளைங்க நாங்க. சோ அவங்க ஆசையை எங்க கிட்ட நிறைவேத்திக்க நினைக்கறதுல என்ன தப்பிருக்குது?”


காலம் அனைத்தையும் மாற்றுமாமே? இவள் மனதில் பாசிபோல் தளும்பி நிற்கும் இவன் ஞாபகங்கள் இத்தனை வருடங்கள் கடந்தும் மாறாமல் கிடக்கிறதே! இதற்கு பெரியவர்களையும் இவளின் முட்டாள்தனத்தையும் நோவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?


எத்துணைப் பெரிய புத்திமானும் ஏதோவொரு விடயத்தில் ஏதோ ஒரு கணத்தில் அடிமுட்டாளாக இருந்து விடுவதுண்டு. அப்படித்தான் அதிமேதாவியான சந்தனாவும் தன் விடயத்தில் அடி முட்டாளாக இருப்பதாகத் தோன்றியது இவனுக்கு.


“மை ஃபூட்! அந்த சஞ்சு இப்போ உயிரோட இருக்கானா இல்லையான்னு கூட உங்க யாருக்கும் தெரியாது. அவனைப் போய்…” 


“அக்னி!!” கடுமை முகம் காட்டினாள்.


அசரவில்லை அவன். “அவன் கொலைக்காரனா இருந்துட்டா என்னடி பண்ணுவ?” 


“ஐ’ல் லைக் ஹிம் நோ மேட்டர் வாட்…” என்றவளின் குரல் உள்ளே போயிருந்தது.


லைக்! ‘லவ்’ இல்லை என்பதைக் குறித்துக்கொண்ட அக்னியின் மூளை சந்தோஷித்தது.


“ஒருவேளை அவன் வராமலே போயிட்டா?”


“என் ஆன்மா அஸ்தமிக்கற வரை என் அன்பும் மாறாது.”


“ஹைட் ஆஃப் ஸ்டுப்பிடிட்டி சந்தனா.”


“ஐ க்நோ!”


“அவனுக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகியிருந்தா?”


“அதை அப்புறம் பார்க்கலாம்.”


“இடைல உனக்கு வேற யார் மேலயாவது லவ் வந்தா?”


ஒரு துளி கண்ணீரை உருண்டோடவிட்டாள். “வராது!”


“வந்துட்டா?”


“நானே என்னை மன்னிக்கமாட்டேன்.”


“யூ ஆர் கோயிங் இன்ஸேன், இடியட்!”


“தட்’ஸ் ஓகே! இப்பவும் இந்த இடியட்டை லவ் பண்றீங்களா?”


“டாம்ன் எஸ்ஸ்! வாட்எவர் யூ ஆர்… ஐ டூ!” அழுத்தம் திருத்தமாக அவள் மண்டைக்குள், மனதிற்குள் ஏறும் வண்ணம் சொன்னான்.


“ஸ்வரூப்…”


இத்தனை நாட்கள் அனு, நிரஞ்சனாவை நினைத்து தவித்திருந்தவன், இப்போது சந்தனாவிற்கும் சேர்த்து, எங்கும் எதற்கும் யாருக்கும் கைம்மாறு செய்ய முடியாத பாவியாக நிற்கின்றோம் என்று தன்னிலை எண்ணி கிடந்து தவித்தான்.


“இதுக்கு முன்னாடி உனக்கு ப்ரப்போஸ் பண்ண யாரையும் உனக்கு பிடிக்கலையா?”


“பிடிக்குது, பிடிக்கலைன்ற வரையறைக்குள்ள யாரையும் நான் வைக்கலன்றது தான் உண்மை.”


‘நானும் அந்த கோட்பாட்டிற்கு உட்பட்டுதான் இருக்கிறேனா?’ என கேட்க வேண்டுமென்ற ஆவல் மேலோங்கியது. முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். முதலில் இந்த அர்ஜூனுக்கு நான்கு அறைகள் விட வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது.


அவள் அவன் சுவைத்துவிட்டு வைத்த ஸ்பூனைத் தயக்கத்துடன் பார்க்க, சட்டென எழுந்துபோய் புதிய ஐஸ்கிரீம் வாங்கி வந்து தந்தான். அதையும் தயக்கமாகவே பெற்றுக்கொண்டாள். 


அக்னியின் எண்ணங்கள் இங்கே இல்லை. அனு, அர்ஜூன், தாத்தா, நிர்மலா என அனைவரிடமும் பொங்கிய ஆத்திரத்தில் முகம் இறுகி போய் அமர்ந்திருந்தான்.


தன்னால் தான் அவன் வதனம் இறுகி கிடக்கிறது என்று நினைத்து மன்னிப்பை வேண்டினாள் சந்தனா. “ஸாரி ஸ்வரூப்…”


“ஹே, டோண்ட் கெட் பேனிக்! சாப்பிடு.” என்றதும் ஐஸ்கிரீமைச் சுவைத்தாள்.


ஒருவனைத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டோம் என்ற எண்ணத்தில், வாழ்வில் முதல்முறையாக அவள் விரும்பும் ஐஸ்கிரீம் தொண்டையில் நின்று கசந்தது.


                           ********


முன்மாலையில் மண்டபத்திற்கு திரும்பியதும், காரிலிருந்து இறங்கியவள், “லவ் ஃபெயிலியர்ல மறுபடியும் தம்மடிக்க போயிடாதீங்க பாஸ்!” என்று கேலியாகச் சொல்ல,


“எங்க பாட்டி எனக்கு ஏஞ்சல் மாதிரி ப்யூட்டியைப் பார்ப்பாங்க. போடி!” என இவனும் சிரித்தபடி திருப்பிக் கொடுத்தான். 


இத்தனை நேர பழக்கத்தில் அக்னிக்கு அவள் மேல் உண்டாகியிருக்கும் உரிமையுணர்வு கூட, அவளுக்கு அவன்‌ மேல் உண்டாகவில்லை. இன்னும் பிரகதியின் அண்ணன் என்ற நிலையிலும், ஓர் புதிய நண்பன் என்ற நிலையிலும்தான் தன்னை வைத்திருக்கிறாள் என்று புரிந்தது. அதில் மனம் சற்று சுணங்கியது. 


‘அவள்தான் மனதில் சஞ்சுவை ஏற்றிருக்கிறாளே!’


ஆற்றாமை அடங்கவில்லை இவனுக்கு. அவள் உள்ளே சென்றதைப் பார்த்துவிட்டு, அர்ஜூனை அழைத்து தன்னறைக்கு வரச் சொல்லிவிட்டு விடுதியறை நோக்கிச் செல்ல, 


காரிடாரில் எதிர்ப்பட்ட பிரபஞ்சன், “உங்கம்மா இன்னும் என்னவோ பாத்திரம் வாங்கணும்ன்னு உயிரை எடுக்கறாடா அக்னி. வந்து என்னன்னு கேளு!” என சலித்துக்கொள்ள,


“என்ன வாங்கணுமோ வாங்கிடலாமேப்பா?” என்றான் இவன்.


“டேய் அவ ஊர் சுத்த ப்ளான் பண்றாடா! நான் இந்த ஆட்டத்துக்கு வரலை. கடைக்குப் போகணும்னு சொன்னதும் பாட்டியும் பர்ஸைத் தூக்கிட்டு கிளம்பறாங்க பாரு!”


இவன் சிரித்தபடி அவர்கள் தங்கியிருந்த அறைக்குப் போக, “அக்னி சிணுக்கோல் வாங்க மறந்தாச்சுடா. ஒரு எட்டு போய் வாங்கிட்டு வந்துடலாம். காரை எடு!” என ஆரம்பித்தார் பாட்டி.


“ஒரு எட்டாம்!” என இவனிடம் நக்கலடித்த பிரபஞ்சன், “ம்மா! அவனே பில்டரைப் பார்த்துட்டு இப்போதான் வர்றான்.” எனக் கடிய,


“இப்பவே ஃபங்ஷனுக்கு எல்லாரும் ரெடி ஆகிட்டாங்க. அப்புறம் போக முடியாதுடா.” என அலுத்துக்கொண்டார் அபிராமி.


“இந்த காலத்துல சிணுக்கோல் எல்லாம் யாரும்மா யூஸ் பண்றா? உங்கப் பேத்திக்கு அப்டீன்னா என்னன்னு கூட தெரியாது.”


“தெரியுதோ இல்லையோ! செய்முறைக்கு நாம செய்ய வேண்டியதைச் செஞ்சிடணும்!”


“யங் லேடி, சின்னப் பொருள்தானே? ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிக்கலாம்.”


“என்ன இருந்தாலும் நாம நேர்ல தடவிப் பார்த்து வாங்கற மாதிரி இருக்குமாடா?”


“ஓ யங் கேர்ள்… இப்போ போக முடியாது. வேணும்னா காலைல சீக்கிரம் ரெடியா இருங்க. நாம போயிட்டு வரலாம்.”


“அவங்கப்பா சொல்லி கொடுத்ததை அப்டியே பேசறான்.” என மகனிடம் போல் கணவனிடம் ஊடல் கொண்டாள் நிரஞ்சனா.


“அம்ம்மா…” அடுத்து அம்மாவைச் சமாதானம் செய்ய கட்டிலில் அமர்ந்து அவள் மடியில் தலை வைத்துக்கொண்டு, “அப்பா சொல்லலைம்மா! நான்தான் சொல்றேன். சின்னப் பொருள் தானே? காலைலப் போனதும் வாங்கிடலாம். பட், டென் மினிட்ஸ்தான் டைம் தருவேன்.” என அவளின் சேலைத் தலைப்பைப் பிடித்து விளையாட,


கடந்த ஐந்து நிமிடங்களாக அனைத்தையும் பார்த்தவாறு மௌனமாக வாசலில் நின்றிருந்தான் அர்ஜூன். அவர்கள் தங்கள் சஞ்சய்யின் மேல் வைத்திருக்கும் அன்பும் நேசமும் உரிமையும் ஏனோ இவனுக்கு ஒருவித அழுத்தத்தைத் தந்தது. 


குரலைச் செருமினான். “ஹாய் அங்கிள்!”


“ஹே அர்ஜூன்! வா வா…” பிரபஞ்சனின் வரவேற்பிற்கு கண்கள் ஒத்துழைக்காத சிரிப்பொன்றைத் தந்தான்.


“அண்ணா வர சொல்லிருந்தார்.” என்றவனின் குரல் நலமின்றி வெளிவந்தது.


அனைவரும் அக்னியைப் பார்க்க, அவன் சொன்னான். “பில்டர் அர்ஜூன் ஃப்ரெண்ட்ன்னு சொன்னேனேப்பா. அதான் வீட்டைப் பத்தி பேச வர சொன்னேன்.”


“ஓ ஆமா! எனக்கு கூட டீடெயில்ஸ் அனுப்பியிருந்தியே… இங்கே உங்கம்மா கூட போராடி நான் அதைப் பார்க்கவே இல்லடா!”


“பாருங்கத்தை! எல்லாத்துக்கும் என்னையே சொல்றார்!”


“ம்மா… ம்மா… சீக்கிரம் சமாதானம் ஆகிட்டு ஹாலுக்கு கிளம்பு! வந்துடறேன்.” என்றவன், பிரபஞ்சனிடம், “நம்ம ரெக்கொயர்மென்ட்ஸ் எல்லாம் சொல்லி கேட்டிருந்தேன். சிமிலரா உள்ள சில வில்லாஸ் காட்டினார். ஃப்ரீ டைம்ல பார்த்து வைங்கப்பா!” எனச் சொல்லிவிட்டு அர்ஜூனுடன் தன்னறைக்கு வந்தான்.


கதவைப் பூட்டியவன் அர்ஜூனின் சுணங்கிய முகத்தைக் கணக்கில் கொள்ளாமல், அவன் பின்னங்கழுத்தைப் பிடித்துக் கட்டிலில் தள்ளினான். 


அதில் அவன் அதிர்ந்து பார்க்க, சீற்றத்துடன் இரைந்தான். “எல்லாருமா சேர்ந்து என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?”


“சொல்லிட்டாளா?”


“சொன்னா! அவ ஒரு கிறுக்கச்சின்னு சொன்னா! சஞ்சுவைப் புருஷனா நினைக்கறதா சொன்னா! நீ என்னைத் தேடினப்போ ரிசல்ட்ல நான் உயிரோட இல்லைன்னு வந்திருந்தா அவக்கிட்ட, ‘நௌ யூ ஆர் அ விடோ!’ன்னு சொல்லிருப்பியாடா?” அண்ணனிடம் அத்துணை ஆக்ரோஷத்தை இவன் எதிர்பார்த்திருக்கவில்லை.


அர்ஜூன் மௌனமாக இருந்தான். மனதில் ஒருவித அமைதி பரவியது. 


“சத்தியமா என்னால முடியல அர்ஜூன்! ஹௌ டூ ஐ ஃபிக்ஸ் திஸ்’டா?” ஓரிடத்தில் நில்லாமல் இத்தனை நேரம் மறைத்து வைத்திருந்தப் பதற்றத்தைக் கொட்டிக் கொண்டிருந்தான்.


“பை மேரி ஹர்…”


“தூக்கிப் போட்டு மிதிச்சிடுவேன் இடியட்! அவ மனசைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்கல நீ!”


சிறு புன்னகை சிந்தினான் அர்ஜூன். “தாங்க்ஸ்! எங்கே நீ செல்ஃபிஷ்ஷா இருப்பியோன்னு நினைச்சேன். இப்போதான் சனாவுக்கு உன்னைக் கட்டி வைக்கணும்ன்ற தாட் ஸ்ட்ராங் ஆகுது!”


“அடிங்! டெஸ்ட் வைக்கறியாடா நாயே? அதுக்குத்தானே என்னைப் பேச அனுப்பிருக்க? எல்லாருமா சேர்ந்து பாசம்ன்ற பேர்ல ஒரு பொண்ணோட மனசையும் வாழ்க்கையையும் நாசம் பண்ணி வச்சிருக்கீங்க அர்ஜூன்!” என்றவன் இன்னும் சில பல கன்னட கெட்ட வார்த்தைகளை எடுத்துவிட,


தம்பிக்காரனுக்கு பாவனாவின் நினைவு! ‘இவனுக்கு பானுவே தேவலாம் போலருக்குது… அர்ஜூன் அர்ஜூன்னு சொல்லி… ஹய்யோ அந்த க்யூட் லிப்ஸால…’


பின்னந்தலையில் படீரென விழுந்த அறையில், அர்ஜூனின் கற்பனையிலிருந்த ‘க்யூட் லிப்ஸ்’ ‘ம்யூட் லிப்ஸாகிப்’ போக, தலையைத் தடவிக்கொண்டு கேட்டான். "இப்போ என்னடா அவளுக்கு உன்னைத் தானே பிடிச்சிருக்குது?”


“என்னை இல்லை! சஞ்சுவை!”


‘ஆத்தாடி பைத்தியமா இவன்?’ எனும் நிலைக்கு போய்விட்டான் அர்ஜூன். 


“ரெண்டு பேருமே நீதானேடாவ்?”


இசைக்கும்...



Comments

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25