Skip to main content

Posts

Showing posts from December, 2024
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ -16

  அத்தியாயம் 16 கல்யாணம் ஆகி நேற்றோடு ஒரு வருடம் ஆகிறது. அதாவது போன வருடம் மருத்துவமனையில் வைத்து, ராஜீவன் பன்னீர் பூ செயினை என் கழுத்தில் போட்ட ஒரு விசேஷமான நாள். போன மாதமே ராஜீவன், 'உனக்கு எங்கேனும் போக விருப்பமா யமுனா?' என்று கேட்டதற்கு வேண்டாமென மறுத்துவிட்டேன். நாங்கள் ஹனிமூன் என்று எங்கும் போகவில்லை. அந்நேரங்களில் கால் சரியாக வேண்டும் என்று ஒரு குழந்தையைப் போல் பார்த்துக் கொண்டான். இப்போது அது போன்ற இடங்களுக்கு போக எனக்கு விருப்பமில்லை. இங்கு வந்து முதல்முறை பூரத்திருவிழா நடைபெறும் வடக்குண்ணநாதன் சிவன் கோவிலுக்கும் அம்மன் கோவில்களுக்கும் போனேன். இங்கே அத்திருவிழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். ஏழு நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. நூறுக்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட யானைகளோடும் செண்ட மேளம், கொட்டு மேளம் மற்றும் பஞ்சவடிய இசையோடும் அந்த தேக்கன் காடு மைதானமே புல்லரித்து போயிற்று.  அந்த வடக்குண்ணநாதன் சிவன் கோவில், ராஜா கடற்கரை, மிருகக்காட்சிசாலை, சக்தி தம்புரான் அரண்மனை, வியூர் சிறை பூங்கா என திருச்சூரிலேயே அத்தனை அழகுகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த ஊரையே கேரளாவின் கலாச்...

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ -14

அத்தியாயம் 14 மரியம் அம்மா முதல் இந்த வீட்டிலிருக்கும் அனைவரும் சிறு முகச்சுளிப்புமில்லாமல், அதிக அக்கறையுமில்லாமல் என்னை இயல்பாகவே நடத்தினர்.  ராஜீவன் எதிலும் நேர்மறை சிந்தனையோடே பேசினான். எதிர்மறையாக ஏதேனும் நடந்துவிட்டால் இதை உன் அனுபவத்தில் சேர்த்துக் கொள்; தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என சொல்லுவான். உண்மையில் ராஜீவனுடனான இந்த வாழ்க்கையில் ஆசிர்வதிக்கப்பட்டவளாகத் தான் உணர்கிறேன். அநேக தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கில புத்தகங்களை வாசிக்கிறான். புதுமைப்பித்தனைப் புகழ்வான்; சுஜாதாவை சிலாகிப்பான்; மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரைக் கொண்டாடுவான். அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் சே-வையும் பேசுவான்; ஃபிடலின் மீது அதீத காதல் என்பான். சுஜாதாவின் ஒரு துளியையும் வாசியாதவர்கள் அவரை விமர்சிப்பதும் பரிகசிப்பதும் நகைப்பிற்குரியதாம். இதற்கு சுஜாதாவே, 'என்னைப் பற்றிப் படிக்கும் போது எனக்கு வியப்பாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது. இத்தனை மனங்களை பாதித்துவிட்டோமோ என்பது வியப்பு. தனக்கு செய்யப்படும் குடல் ஆபரேஷனை சர்ஜன்களுடன் தானும் ஒரு ஓரத்தில் பின்கையைக் கட்டி நின்றுகொண்டு பார்க்கும், கார்ட்...

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ -2.

அத்தியாயம் 2 ப்ரித்வியின் முகத்தில் வியர்வைத் துளிகள் மினுமினுத்தன. தாங்கவியலா அழுத்தத்தில் தொண்டைக்குழி ஏறி இறங்கியது. தலையை அழுந்தக் கோதியபடி கண்கள் மூடி அமர்ந்துவிட்டான். மியாவைப் போல் யமுனாவும் திருமணமே வேண்டாம் என்று இருக்கிறாள் போலும் என்றே நினைத்திருந்தான் ப்ரித்வி. தன்னிடம் குறை என்று எதுவுமில்லை. ஆக இத்தனை வருடங்கள் கழித்து திருமணத்திற்கு சம்மதித்திருக்கும் மியாவைப் போல் யமுனாவும் மனம் மாறிவிடுவாள் என்று கணித்துவிட்டான். "ப்ரித்வி! ப்ரித்வி! என்னடா பண்ணுது?" மாரடைப்பு வந்தவன் போல் அமர்ந்திருந்தவனை உலுக்கினாள் மியா. யமுனாவிற்கு இன்னமும் திருமணமாகவில்லை என்று இவன் உள்மனம் எப்படி அத்தனை நிச்சயமாய் நம்பியது? அதனாலல்லவோ அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தியிருந்தான்!  "டேய் ப்ரித்வி!" "யாரு அவரு?" "நீ வீட்டுக்கு வா! நான் எல்லாம் சொல்றேன்." "பேரென்ன?" "ப்ச் ப்ரித்வி!" "மிஸஸ் யமுனா..?" 'பெயரை முழுமையாக்கு' என்று அடத்துடன் பார்த்தான். சொல்லாமல் இடத்தை விட்டு நகர மாட்டானென புரிந்த மியா சொன்னாள். "யமுனா ரா‌ஜீவ...

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ -1.

அத்தியாயம் 1 "ஹே ய் மியா!" தன் புதுமனைவியின் ஈரக்கூந்தலை கையிலிருந்த ஹேர் டிரையரால் உலர்த்திக் கொண்டிருந்த ரித்திஷ் அழைத்தான். "ஹ்ம்ம்…" - கூந்தலுக்கிடையே உலாவும் அவன் விரல்கள் தந்த இதத்தில் விழிமூடியிருந்த மியா! "நேத்து பார்ட்டிக்கு வந்த உன் ஃப்ரெண்ட் பத்தி சொல்றேன்னியே?" "நீதான் நேத்து ஃபுல்லா என்னை சொல்லவே விடலயே…" அசடு வழிந்தவன், "ஹேய் சரி சரி ரொம்ப ஓட்டாத! இப்ப சொல்லு கேட்கறேன்." என்றான். இருவருக்கும் பத்து நாட்கள் முன்பு திருமணம் முடிந்திருந்தது. தேனிலவுக்கு செல்லுமுன் நண்பர்கள் கேட்ட ட்ரீட் தந்துவிட வேண்டி, நேற்று வீட்டிலேயே சிறிய பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு வந்திருந்த ஒரு பெண்ணைப் பற்றி தான் தற்போது தம்பதிகளுக்கிடையே பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. திருமணத்தன்றும் இவனிடம் அவளைக் குறித்து தீர்க்கமானப் பார்வையோடு ஏதோ சொன்னாள் மியா. நேற்றும் அதே போன்ற பார்வையில், "இவங்க…" என்று என்னவோ சொல்ல வந்தவளை மற்றொரு விருந்தினரின் வரவு தடை செய்திருந்தது. இப்போது அவள் இவர்களுக்கு தந்த பரிசுப் பொருள் கண்ணில்படவும், நினைவு வந்...
🍪 This site uses cookies to improve your reading experience. Learn more.