Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஸ்கார்பியோ காதல்🚗 - 10.2

ஸ்கார்பியோ காதல்


அத்தியாயம் 10.2

அதைப் புரிந்தவன் சின்னதாய்ச் சிரித்தான். “ரேவ்ஸ்க்கு இன்செக்யூரிடி ஃபீல்ன்னு எனக்கும் புரிஞ்சது. ஏன்னா எல்லா விதத்துலயும் நான் அவளை ஒரு கெஸ்ட்டா மட்டும்தான் நடத்தினேன். அதைத்தான் அவ அழுதுக்கிட்டே கேட்டா! இதைச் சொல்ல வேணாம்னு நினைச்சேன். பட் நீங்க கெஸ் பண்ணிட்டீங்க. டாக்டர் இல்ல?”

அவனின் சிரிப்பு சிலாகிப்பாய் விரிந்தது.

அதைக் கண்டுகொள்ளாமல், “என்… என்ன கேட்டாங்க?” என்றவளின் விழிகளில் பதில் வேண்டி அவசரம்!

“ம்ம்… குழந்தைக்கு எல்லாம் நீ பார்த்துப்பேன்னு சொல்ற… ஆனா அவ அம்மாவை நீ வைஃப்’ஆ ஏத்துக்கலயேன்னு… துரத்தி துரத்தி லவ் பண்ணவன் இப்போ நான் வந்ததுல இருந்து என் மேல உன் பார்வை கூட படல; அப்போ நீ என்னை எப்போ வேணாலும் உன் வீட்டை விட்டு துரத்தி விட்டுடுவன்னு தானே அர்த்தம்னு கேட்டா…”

அம்ரு சட்டென சாந்தமாகிவிட்ட மனத்துடன் இதழ்களை மூடித் திறந்து கன்னக்குழிக்கு மற்றொரு வாய்ப்பைத் தந்தாள்.

“சீரியஸ்லி அவ்ளோ நடந்ததுக்கப்புறம் என்னால ரேவ்ஸை என் வைஃப்’ஆ பார்க்க முடியல டாக்டர். அன்னிக்கு அந்த தாடிக்காரன் பின்னாடி நின்னு என்னை ஆங்காரமா பார்த்தாளே… அது எனக்கு இன்னும் மறக்கல. ரேவ்ஸைப் பார்க்கும்போது எனக்கு அவனோட பொண்டாட்டியா தான் தெரிஞ்சா! அப்புறம் எப்டி என்னால…” என இடவலமாகத் தலையசைத்தான்.

“இதை நான் யார்க்கிட்ட சொன்னாலும் நம்பியிருக்க மாட்டாங்க. ஆனா நான் எதுவுமே சொல்லாம நீங்க எப்டி என்னை நம்புனீங்க டாக்டர்? நான் அவ பக்கத்துல இருந்துருக்கேன்னு தெரிஞ்சும் அவ அவளோட ஹஸ்பண்ட் இல்லாத அழுத்தத்துல இருக்கான்னு எப்டி சொல்ல முடிஞ்சது?” எனக் கேட்டவன் அம்ருதாவை விழிகளால் ஆலாபனை செய்து தாலாட்டினான்.

அந்த க்ஷணம் அவன் பார்வையில் கபடம் இல்லை; கல்மிஷம் இல்லை. அவன் மேல் அவள் கொண்ட நம்பிக்கைக்கான அன்பான பார்வை அது; படம் வரைந்துவிட்டு பாராட்டு பெற்ற சிறுவனின் பார்வை அது! யாருமற்ற அவனின் அண்டத்தில் அவனை முழுதாய் நம்பும் புதிய ஜீவனொன்றைக் கண்டெடுத்துவிட்ட ஆத்மார்த்தப் பார்வை அது!

சொல்லப்போனால் இப்போதுதான் நீண்ட நிமிடங்களாகத் தன் முகத்தை அவன் பார்க்கிறான் என்பதைக் கவனித்தாள் அம்ருதா.

“யூ ஆர் சச் ஆன் ஏஞ்சல் டாக்டர்! திஸ் இஸ் வை யாருக்கிட்டேயும் ஷேர் பண்ணிக்க விரும்பாததை உங்ககிட்ட ஒப்பிச்சிட்டிருக்கேன் போல…” என்று தனக்குத்தானே பேசுபவனாகத் தலையாட்டினான்.

“அப்டிலாம் ஒண்ணுமில்ல சர். அவங்களுக்கு உங்களைப் பிடிக்கலன்னு தானே பிரிஞ்சு போனாங்க. அதான் நான் அப்டி நினைக்கல.” என்று ஒப்புக்கு சொல்லி வைத்தாள். உண்மையில் அவன் மீதான நம்பிக்கை தானே அவளை இத்தனை தூரத்திற்கு இழுத்து வந்திருக்கிறது!

மென்சிரிப்பு அவனிடம். “ம்ம், நானும் அன்னிக்கு அதையே தான் சொன்னேன், உனக்கு தான் என்னைப் பிடிக்காதே ரேவ்ஸ்ன்னு! குத்திக் காட்டுறேன்னு சொன்னா… அப்டியே கொஞ்ச நாள் போச்சு. அது நான் கம்பெனில அஸிஸ்டெண்ட் மேனேஜரா ப்ரமோட் ஆன டைம்! அம்முக்குட்டியை ப்ளே ஸ்கூல்ல சேர்த்தேன். ரேவ்ஸ்க்கு அவ குழந்தையைப் பார்க்கவே கஷ்டம். ஸோ அம்முவை நானே பிக்கப் பண்ணிட்டு, ஆஃபீஸ்ல இருந்தே ப்ளே ஹவுஸ்ல விட்டு பார்த்துக்கிட்டேன். அதுக்கும் நான் அவளை நம்பாம இப்டி பண்றேன்னு சண்டை போட்டா! ஒரு ஸ்டேஜ்ல எனக்கு வீட்டுக்கு போகவே எரிச்சலா இருந்தது.”

“பேபி அம்மாவைத் தேடலயா?”

“ப்ச் ப்ளீஸ் டாக்டர்! என் அம்முக்குட்டிக்கு ரேவ்ஸ்’அ அம்மான்னு சொல்ல வேணாம்.” அழுத்தந்திருத்தமாக சொன்னவனின் விழிகளில் சீற்றம்!

“ஓகே ஓகே… ரிலாக்ஸ்! அப்புறம்?”

“திடீர்னு கொஞ்சநாளா என்கிட்ட நல்லவிதமா பேச ஆரம்பிச்சா! அவளோட கசின் யாரோ ஃபினான்ஷியல் ஹெல்ப் பண்றதா சொல்லி, குழந்தைக்கு இன்னும் நிறைய டிரெஸ், டாய்ஸ்ன்னு வாங்கி குவிச்சா! மன்த்லி செக்கப், வேக்ஸின்னு அடிக்கடி ஹாஸ்பிடல் போக ஆரம்பிச்சா… அதுவும் வீட்ல இருந்த ஹெல்பர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். ஏன்னா ஹாஸ்பிடலுக்கு பணம் என்கிட்ட வாங்கல.” இதுவரை இல்லாத தீவிரத்தில் ஒலித்தது அவன் குரல்.

அம்ரு அவன் முகபாவங்களைப் பார்த்தாலும் கவனம் கதையிலேயே இருந்தது.

“அப்புறம் ரொம்ப அக்கறையா பேசி அம்முக்குட்டியைத் தானே ப்ளே ஸ்கூல்ல இருந்து கூப்பிட்டுக்கறதா சொன்னா! நானும் சரின்னு அவளை நம்பி அம்முவை அவக்கிட்ட விட்டேன். ஆனா… ஆனா…”

கண்கள் ஒரு நிலையிலில்லாமல் தவிக்க, நீண்ட நீண்ட மூச்சுக்களாக எடுத்தவனை, எழுந்து நின்று தோள் தட்டி ஆசுவாசப்படுத்த முயன்றாள் அம்ருதா. அந்நிய பெண்ணின் நெருக்கத்திலும் ஸ்பரிசத்திலும் அஸ்வத் நடப்பை உணர்ந்திருக்க வேண்டும்.

“உங்களுக்கு கஷ்டமா இருந்தா நாம இன்னொரு நாள் பேசலாம் சர்.” என்று இவள் அவனருகேயே நின்று சொல்ல,

“நோ நோ!” என்று அவளின் கரம் பற்றி, தன்னிடமிருந்து விலக்கி பழையபடி அமரச் செய்தவன், “அந்த ரேவ்ஸ்… நன்றிகெட்ட நாய் அவ அடிக்கடி ஹாஸ்பிடல் போறான்னு சொன்னேன்ல? அவ குழந்தையை ட்ரீட் பண்ண டாக்டர் கிட்ட தான் போயிருக்கா. இவ தனியாவே போறதால அந்த கன்னிங் ஃபாக்ஸ் இவளைப் பத்தி மெதுவா விசாரிச்சிருக்கான். இவளும் சிம்பதிக்காக இவளுக்கு யாரும் இல்லாத மாதிரி சொல்ல, அப்போ இவ குழந்தையை யூஸ் பண்ணிக்க நினைச்சிருக்கான்.”

பதறும் நெஞ்சத்தைப் பிடித்தபடி கேட்டாள் அம்ரு. “எதுக்கு?”

“மெடிசின் ரிசர்ச்’க்கு! இவ தன்னோட குழந்தையைக் காப்பாத்திக்க என் அம்முக்குட்டியை பலி கொடுக்க துணிஞ்சிட்டா!”

‘அதிர்ச்சிகளைச் சேர்த்து வை!’ என்று அப்போது அவன் சொன்னதற்கான அர்த்தம் இப்போது விளங்கியது. அம்ரு அதிர்ச்சியில் சிலையாகி இருந்தாள்.

“அவளை நம்பி என் பொண்ணை விட்டுட்டு போனேன்ல? அவளோட சுயலாபத்துக்காக தூக்கி அவன்கிட்ட கொடுத்துட்டா!”

அம்ரு அதிர்ச்சியிலிருந்து விடுபடாமல் தயங்கிக் கேட்டாள். “சர்… எப்டின்னு கொஞ்சம் எக்ஸ்ப்ளைன் பண்றீங்களா? எனக்கும் மெடிசின் ரிசர்ச் பத்தி கொஞ்சம் தெரியும்…”

“ம்ம் தெரியுமே!”

“ஆங்?”

“எக்ஸ்ப்ளைன் பண்றளவுக்கு தெரியும்னு சொன்னேன்.”

பொருந்தாத பதில்! அதில் ஏதோவொரு நெருடல் இவளுக்கு. இருந்தும் அப்போதைக்கு அதைப்பற்றி கேட்கத் தோன்றாமல் வேறு கேட்டாள். “அவங்க உங்களுக்கு தெரியாம செஞ்சிருந்தாலும் ஏதோ ஒரு சமயத்துல கூட உங்களுக்கு அந்த லேடி மேல சந்தேகம் வரலயா?”

“நிறைய சந்தேகம் வந்துச்சு. அம்முவை ஒரு முறை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கும் போதுதான் அவ மேல ஸ்ட்ராங் டௌட் வந்தது. அதுக்கு முன்னாடி அவளுக்கு வர்ற பணமெல்லாம் யாரோ ஒரு கசின் தந்தா’ன்னு சொன்னப்போ, அடிக்கடி வெளியே போயிட்டு வரும்போது, மொபைல்ல யார்க்கிட்டேயோ திருட்டுத்தனமா பேசும்போது, அம்மு மேல பாசமா இருக்கற மாதிரி காமிச்சு அவளைத் தன்னோடவே தூக்கிட்டு சுத்தும்போது… இப்டி நிறைய சந்தேகம் வந்தது டாக்டர். அவளுக்கு புதுசா யாரோடயோ கான்டாக்ட் இருக்குதுன்னு நினைச்சேன்.”

“டிபிகல் மென்’ஸ் மைண்ட்செட்!” என்று முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு முணுமுணுத்தவளைக் கண்டு, அஸ்வத்திற்கு அந்நிலையிலும் சிரிப்பு வந்தது.

“டாக்டர் மேடம், நான் தப்பா யோசிக்கல. கான்டாக்ட் மீன்ஸ் அது அஃபேரா தான் இருக்கணும்னு இல்லயே… புது ஃப்ரெண்ட்ஷிப்பா கூட இருக்கலாம். ஆனா அது நல்லதுக்கில்லன்னு மட்டும் புரிஞ்சது. அது எனக்கு தெரிஞ்சிடக்கூடாதுன்னு அம்மு மேல பாசம் இருக்கற மாதிரி டிராமா பண்றான்னு நினைச்சேன். அதுக்கு மேல அவளைப் பத்தி நான் வேற எதுவும் யோசிக்கல. ஆனா அவ இவ்ளோ பெரிய திட்டத்தோட இருந்திருப்பான்னு நினைக்கவே இல்ல!” என்றவனுக்கு துக்கம் பொங்கிட, நெஞ்சை அழுத்திக்கொண்டான்.

“ஸாரி சர். எல்லாத்தையும் திரும்ப ஞாபகப்படுத்திட்டேனா?”

“இல்லன்னா என் பொண்ணை நான் மறந்துடுவேனா?” விரக்தி சிரிப்பும் கண்களின் வலியும் அஸ்வத்தின் இழப்பைப் பூதாகரமாகப் பறைசாற்றியது.

சில நிமிடங்கள் அமைதிக் காத்திருந்த அம்ருதா அன்று அவன் குழந்தையின் உடலுடன் வேற்றூரிலிருந்து வந்ததை வைத்து கேட்டாள். “எந்த டாக்டர்ன்னு தெரியுமா சர்? சென்னை தானா? வேற ஊரா?”

சட்டென்று நிமிர்ந்தவன், “இன்னும் தெரியல. ஆனா கண்டுபிடிப்பேன் டாக்டர்! என் அம்மு என் பாதைல பறக்கற பட்டாம்பூச்சியா இருந்தா… என் கண்ணைக் குருடாக்கி என் பட்டாம்பூச்சியை உயிரோட நசுக்கி, என் பாதையைச் சூன்யமாக்கினவனைச் சும்மா விடமாட்டேன். என் பொண்ணோட இரத்த வாசனை இன்னும் கைல இருக்குது மேடம்… அதே கைல அவனோட இரத்தத்தையும் பார்க்காம விடவே மாட்டேன்.” என்று அடக்கப்பட்ட சீற்றத்துடன் உள்ளங்கையை விரித்து வைத்துச் சொல்ல, 

அந்தக் கையை மெதுவே பற்றினாள் அம்ருதா. “கண்டுபிடிக்கலாம் சர்.”

This is just the ignition🚗...


Comments

  1. அப்போ.. ஹரிஷூம் இதில் சம்பந்தப்பட்ருக்கான்போல.
    ம்ம்... அஸ்வத்தும், ஹரிஹூம் சந்திச்சிகிற அத்தியாயத்தை படிக்க ஆவலுடன் இருக்கின்றேன்.
    📖இதுவரை படித்திராத புதிய கதைக்கரு.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் கருத்து தெரிவிக்கறீங்க. மிக்க நன்றி😍😍

      Delete
  2. Harish thaan andha research panna doctor ah?

    ReplyDelete

Post a Comment

Popular Posts 💫

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...
🍪 This site uses cookies to improve your reading experience. Learn more.