Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

ஸ்கார்பியோ காதல் - 12.1

ஸ்கார்பியோ காதல்
Amru at Aswath's home


அத்தியாயம் 12.1


அஸ்வத் வீடிருக்கும் பகுதி தாம்பரத்தில் உள்ளடங்கி இருந்தது. பணக்காரர்கள் வசிக்கும் விசாலமான தெரு. தெருவின் முடிவில் சற்று தள்ளி புதிதாய் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கால்கள் ஊன்றி எழும்பிக் கொண்டிருந்தன. 

அம்ருதா எந்த தைரியத்தில் அவன் வீட்டிற்கு வந்தாள் என்று தெரியாது. அதிலும் அவளின் மகிழுந்தை எடுத்து வந்திருக்கவில்லை. அவள் தெருவுக்குள் நுழைந்ததும் வீட்டினைத் தேட தேவையற்று அஸ்வத் வெளிவாசலில் வந்து நின்றிருந்தான்.

ஊபர் வாகனத்தில் வந்து இறங்கியவளைக் கண்டவன், அவளுக்கு பின்னேயே வந்த இரு சக்கர வாகனம் சிறிது தொலைவில் நின்றுவிட்டதையும், அந்த ஹெல்மெட் தலை இவர்கள் பக்கம் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டதையும் கவனித்தான். ஏனோ சந்தேகம் தோன்றிவிட, கூர்ந்து பார்த்து அவ்வாகனத்தின் எண்ணை மனிதில் குறித்து வைக்க, அம்ருதா அலைபேசியில் கட்டணத்தைச் செலுத்தித் கொண்டிருந்தாள்.

“வாங்க டாக்டர். உங்க கார் என்னாச்சு?”

அவனோடு உள்ளே நடந்தபடி சொன்னாள். 
“சொன்னா சிரிப்பீங்க. மை‌ பேரண்ட்ஸ் வோண்ட் லெட் மீ டிரைவ் தி கார்! இப்போ அண்ணா ஊர்ல இல்லைன்னு தான் ஹாஸ்பிடலுக்கு மட்டும் எடுத்துட்டு போக அப்பா அலோவ் பண்றார். அதுக்கே நான் ஒருவேளை உண்ணாவிரதம் இருந்தேன் தெரியுமா?”

“ஹஹ்ஹஹ…”

“தேவையில்லாம வெளியே சுத்தக்கூடாதுன்னு ஆர்டர் வேற! அண்ணா வந்து மைலேஜ் செக் பண்ணுவான். அதான் கேப் புக் பண்ணேன்.”

‘அப்டீன்னா நானே வந்திருப்பேனே… ஏன் இவ இவ்ளோ தூரம் வரணும்? என்னை வேவு பார்க்கவா?’ அம்ருதா குறித்து அஸ்வத்தின் சந்தேகம் வளர்ந்து கொண்டே போனது.

“ஏன் கார் ஓட்ட பர்மிஷன் இல்ல டாக்டர்? பொம்பளை பிள்ளையைப் பொத்தி வைக்கற கன்சர்வேடிவ் ஃபேமிலியா?”

அவன் தந்த ஆரஞ்சு சாறு குவளையை வாங்கிக்கொண்டு இலகுவாக அமர்ந்தபடி சொன்னாள். “ச்சச்ச! அப்பா கண்டிப்பு தான்; ஆனா கன்சர்வேடிவ் இல்ல சர். இல்லன்னா என்னை டாக்டருக்கு படிக்க வைப்பாரா? ஆனா நீங்க சொன்னதுல கொஞ்சம் சரி! எங்கண்ணா தான் என்னைப் பொத்தி பொத்தி பார்த்துப்பான். அவனோட மூத்தப் பொண்ணு நானு!”

அஸ்வத்தின் முறுவல் தேய்வதைக் கவனியாமல், அண்ணனின் நினைவில் முகம் மென்மையுற பேசிக் கொண்டிருந்தாள் அம்ரு.

“எனக்கு டிரைவிங் அட்வென்சர் ரொம்ப பிடிக்கும். அதுவும் எல்லா காரையும் ஓவர்டேக் பண்ணிட்டு போற ஸ்பீட் த்ரில்லிங் செமயா இருக்கும். அதான் என்னைப் பத்தி தெரிஞ்சதால எனக்கு கார் தர மாட்டாங்க.”

“ஓ! பட் டிரைவிங் இஸ் மை பேஷன், டாக்டர்.”

சட்டென்று, “ஐ க்நோ!” என்று சொல்லிவிட்டு அவனறியாமல் குவளை மறைவில் நுனிநாக்கைக் கடித்தாள் அம்ருதா. அவளின் கன்னக்குழி அஸ்வத்தை இரண்டு நொடிகள் தரிசித்துவிட்டு மறைந்தது.

அவன் கேள்வியாய் நெற்றி சுருக்குவது கண்டு, “அன்னிக்கு என்னை வீட்ல டிராப் பண்ண வந்தப்போ உங்க டிரைவிங்’அ பார்த்தேனே…” என்றதற்கு தலையசைத்தாலும், 

‘இந்த பெண்ணிடம் ஏதோ மறைபொருள் இருக்கிறது. கவனி!’ என்றது அஸ்வத்தின் உள்ளுணர்வு.

“சாப்பிடலாமா டாக்டர்? மெய்ட் சமைச்சு வச்சிருக்காங்க.”

“அதான் ஜூஸ் எடுத்துக்கிறேனே… போதும் சர்.” என்று இங்கிதமாக மறுக்க,

“ஆனா நான் இன்னும் லன்ச் முடிக்கலயே? நீங்களும் இன்னும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க! வாங்க டாக்டர்.” என்றான்.

அவள் தயக்கத்துடன் அஸ்வத் காட்டிய நாற்காலியில் அமர, 
அவளுக்கு பரிமாறியபடி சொன்னான். “நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சிருந்தா ஏதாவது ஸ்பெஷலா சமைக்க சொல்லிருப்பேன்.”

“எவ்ளோ ஸ்பெஷல் ஐட்டம்ஸ் இருந்தாலும் சாம்பார் சாதம்தான் எனக்கு இஷ்டம்.” என்று சாந்தியின் சமையலை ருசி பார்த்தவளின் நாவின் சுவை அரும்புகள் ‘பேஷ்!’ என்றன.

அஸ்வத் தனக்கும் பரிமாறிக் கொண்டு உண்ணத் துவங்க,
“உங்க ஹெல்பரை எனக்கு தந்துடுங்களேன் சர்! அதுவும் இந்த பருப்பு போட்ட அவியல் செம டேஸ்ட்.” என்றிட,

அஸ்வத் சிரித்தான். “ஸாரி டாக்டர். அவங்க வீடு இங்கே பக்கத்துல தான் இருக்குது. உங்க ஏரியாவுல இருந்து ரொம்ப தூரம். ஐ’ம் ஹெல்ப்லெஸ்! நீங்க வேணும்னா வீட்டை மாத்தி அவங்க வீட்டுப் பக்கம் வந்துடுங்களேன்!”

“ம்ம்! இந்த டேஸ்ட்டுக்காக வரலாம்தான். வொர்த்து!” என்று உணவினை விழுங்கி சிலாகித்திட, அஸ்வத்தின் புன்னகை விரிந்தது.

முதலில் உண்டு முடித்த அம்ருதா கைக்கழுவி விட்டு, கூடத்திற்கு வந்து விழிகளைச் சுழற்றினாள். அஸ்வத் மகளின் புகைப்படம் எதுவும் அங்கே இல்லை. ஆனால் அந்தக் குழந்தை உபயோகித்த பொருட்களெல்லாம் இன்னும் அவள் அங்கே வசிப்பதான அடையாளங்களாகத் தெரிந்தன.

அஸ்வத் வந்ததும் ரேவதி தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்றான். 
“ஒருநாள் அம்முக்குட்டி மயங்கி விழுந்துட்டான்னு ஸ்கூல்ல இருந்து கால் வரவும் அடிச்சு பிடிச்சு ஓடினேன். சாதாரண மயக்கமா இருக்கும்னு நினைச்சோம். ஆனா அடுத்த ரெண்டு நாளும் கூட குழந்தை டயர்டாவே இருந்தா.” என்றவன், மருத்துவ காகிதங்கள் அடங்கிய ஒரு கோப்பினை எடுத்துத் தர,

அதனை வாங்கி புரட்டினாள் அம்ருதா.
பெயர் இருக்குமிடத்தில், ‘அமிழ்தயாழினி’ என்றிருக்க, அஸ்வத்தின் அம்முக்குட்டியை அதில் பெருவிரலால் வருடினாள்.

“இது அன்னிக்கு அவளை ஹாஸ்பிடல்ல காட்டினப்போ டயக்னோஸ் செஞ்ச காப்பி!” 

“இது ஸ்கேன் ரிப்போர்ட்ஸ்.”

“இது அந்த டாக்டர் பிரிஸ்கிரைப் பண்ண மெடிசின்ஸ்!”

எல்லாம் அவளுக்கே தெரியும் என்று புரிந்தாலும் குழந்தையின் நினைவில் உணர்ச்சிவசப்பட்டு மனத்தினைக் கட்டுபடுத்த முடியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்.

அவனைப் புரிந்தவள் அமைதியாக அவனின் புலம்பலுக்கு செவிமடுத்தாள். குழந்தைக்கு ரேவதி தந்த மருந்தால் ஏற்பட்டிருந்த பக்க விளைவுகளையும் அதற்கேற்ப எழுதப்பட்டிருந்த மருந்துகளையும் அவளின் மருத்துவ மூளை அவதானித்துக் கொண்டே வந்தது.

“இது ஓகே சர்! பேபிக்கு அந்த லேடி கொடுத்தது என்ன மருந்துன்னு உங்களுக்கு தெரியுமா? ஏதாவது பேர் ஞாபகம் இருக்குதா?”

இல்லையெனப் பரிதாபமாகத் தலையாட்டினான். அவனை அப்படிப் பார்க்கவே அம்ருவிற்கு மனத்தைப் பிசைந்தது. 

கையிலிருந்த கோப்பினை இறுக்கிப் பிடித்தவள் ஆற்றாமையாகக் கேட்டாள். “ஒரு குழந்தையை மெடிக்கேஷன் ரிசர்ச்க்கு உட்படுத்தணும்னா ரிசர்ச் புரோடோகால்ல நிறைய லீகல் ஃபார்மாலிட்டீஸ் ஃபாலோ பண்ணனும் சர். முதல்ல உங்களோட… ஐ மீன் பேரண்டல் பர்மிஷன் வேணும். நீங்க எப்டி அவ்ளோ கேர்லெஸ்ஸா இருந்தீங்க? இப்போ எதை வச்சு அவங்களைக் கண்டுபிடிக்க போறீங்க?”

அஸ்வத் எழுந்து அலமாரியைத் திறந்து ஓர் அலைபேசியை எடுத்தான். “ரேவ்ஸ் மொபைல். அவ போனதுக்கப்புறம் லாக் பேர்ட்டனை உடைச்சேன்.” என்றவன், புலனச்செய்திகளில் ஓர் குழுவின் அரட்டையைத் திறந்து அம்ருவின் கையில் கொடுத்தான். 

“உட்கார்ந்து படிங்க டாக்டர்.”

அதைக் காதில் வாங்காத அம்ருதா அந்த அரட்டைச் செய்திகளில் மும்முரமாகிவிட்டாள். அந்தக் குழுவில் ரேவதியைச் சேர்த்து நான்கு நபர்கள் இருந்தனர். வெறும் எண்கள் மட்டும்தான் இருந்தன. பெயர்கள் ஒன்றும் பதியப்பட்டிருக்கவில்லை. திரையைத் தள்ளி பொதுவாக ஓரிடத்திலிருந்து வாசித்தாள்.

‘When are you bringing the baby?’

‘At 1:30p.m. today. And when will u finish ur work? I need to get the baby home before six.’

‘Yeah! Let's finish it before then👍’

‘Nambalama? Last time madhiri late ahidadhey?’

‘Yen bayandhu saagara Rev? Late aana baby a kutitu park ponen nu oru poi solla mudiyatha?🤷’

‘Ungaluku andha Aswath pathi theriyala Ma’am… I think avanuku already en mela doubt vandhuduchu.’

‘Shh… Shut up! I hate that u r afraid of that a*****e, Rev!😡’

‘Sir…😣😣’

‘Aarambichitan. Jollu🤦’

‘Don’t call me Sir, Rev! Call me Tharu!’

Aama thaara karaichu oothina moojikku Tharu…🤪’

‘That sangoothura vayasula Sangee…tha🤣’

‘Deii! I’m talking with my darling Rev! U two go out! Revathi nee sollu. Indha weekend en farm house variya?’

‘Hey Coke! Baby consent ku create panna grp a ivan edhuku use pandran paarudi🥱’

‘Hmm… indha arivula konjam research layum kaatina nalla irukum😏’

‘I would like to remind u both dudes… I have a higher cutoff marks than both of u😎’

‘Coke, vaadi ini avan perumai adikaradha parka enaku thembilla🤕’

‘Rev irukiya? enga poita?’

‘Iruken sir.’

‘Call me Tharu. Sollu variya?’

‘Hmm…’
‘Ennadi?’

‘Unga idam enga irukudhu?’

‘Kovalam.’

‘Oh… but avlo thooram poitu return varadhuna Aswath ku doubt varume…’

‘U bloody ***! Yen summa avan peraiye sollitu iruka? Vara mudiyuma mudiyadha? Just say that!’

‘Don't be angry with me sir… Varen. Enaku location share pannunga.’

படித்துக் கொண்டிருந்த அம்ருதா சட்டென்று நிமிர்ந்தாள். அஸ்வத் ஜன்னலருகே நின்றிருந்தான்.

இவள் படிக்கும் மும்முரத்தில் தன்னிச்சையாக கட்டிலில் அமர்ந்திருந்த அஸ்வத்தை ஒட்டி அமர்ந்ததையோ, அவன் அவளின் வாசனை திரவியத்தை மூச்சுக்குள் இழுத்துக்கொண்டு எழுந்து ஜன்னலோரம் சென்றதையோ உணரவில்லை. இப்போதும் அவளுக்கு அதில் அக்கறையில்லை. 

அவள் எண்ணங்களெல்லாம் அந்த அரட்டையிலேயே தேங்கிட, துரதகதியில் அஸ்வத்திடம் கேட்டாள். “சர் இதுல லொகேஷன் ஷேர் பண்றதா அவன் சொல்லிருக்கான்?”

“ம்ம், ரேவ்ஸோட பிரைவேட் சாட்க்கு அனுப்பிருக்கான்.”

“இன்னும் என்ன அவளுக்கு செல்லப் பேரு?” என்று தன்னை மறந்து கத்தியிருந்தாள் அம்ருதா.

ரேவதி கெட்டவளாகவே இருந்தாலும் நேற்று அஸ்வத் அவளின் நடத்தையைக் குறிப்பிடுகிறானென்று தவறாகப் புரிந்துகொண்டு அவன்மேல் கடுப்புகள் கிளம்பியதுதானே? ஆனால் ரேவதி உண்மையிலேயே அப்படித்தான் என்று தெரிந்ததும், அவள்மேல் உண்டான அசூயையோ அல்லது தனது சொல் பொய்த்துவிட்டதில் உண்டான கோபமோ தெரியவில்லை. அந்த எரிச்சலில் இருந்தவள் அஸ்வத் மீண்டும் ரேவதியை பிரத்யேக அழைப்பில் அழைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் கத்திவிட்டாள்.

To be continued 👇... 


Comments

Popular Posts 💫

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...
🍪 This site uses cookies to improve your reading experience. Learn more.