ஸ்கார்பியோ காதல் - 12.2

ஸ்கார்பியோ காதல்

அத்தியாயம் 12.2


அஸ்வத்திற்கு அம்ருவின் கோபம் புதிதாக தெரிந்ததுவோ? ஆச்சரியம் போல் லேசாக புருவம் உயர்த்தி சிரித்தான்.

“அது செல்லப் பேருன்ற கான்ஷியஸே எனக்கில்ல டாக்டர். பழக்கத்துல சொல்லிட்டேன். ஸாரி…”

இதழ் அழுத்தி கன்னக்குழியுடன் முறைப்பாகப் பார்த்தவள், “அந்த லொகேஷனுக்கு நீங்க போனீங்களா? கோவளத்துல எந்த ஏரியா?” எனக் கேட்க,

அஸ்வத்தின் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்தது. அம்ருவின் முகம் பார்க்காமல் சொன்னான். “ம்ம் போனேன். பட் அது அவனோட சொந்த ஃபார்ம் ஹவுஸ் இல்ல. ரேவ்ஸ்… ஸாரி அவளோட இருக்க மட்டும் அந்த வீட்டை யூஸ் பண்ணிருக்கான்.”

அதற்குமேல் அந்த பேச்சினைத் தொடர அசூயைக் கொண்டவள், புலனச் செய்திகளில் கடைசியாக இருந்த உரையாடல்களை வாசித்தாள்.

‘Ma’am, baby ku edhuvum ahadhunu sonninga… But Innaiku ava school la mayangi vizhundhutalam.’

‘Rev, oru medicine edutha side effects vara dhana seiyum?’

‘Ma’am, bayama irukudhu😥’

‘Nothing to worry, Rev!’

‘Yes, bayapadadha ma… Nee baby a nalla observe panni avaloda health condition a engaluku update pannu and whatever happens don't stop our syrup!’

‘Ok Sir.’

‘Indha weekend baby a kutitu vaa, Rev! Oru full health checkup pannidalam.’

‘Ok Ma’am.’

‘Baby antha aal kita edhuvum sollala illa?’

‘Solla maata ma'am. Daddy kita sonna nee sethu poiduva nu mirati vachiruken.’

‘Good.’

‘Ma’am… Sir…’

‘Enna Rev?’ 

‘Sollu ma!’

‘Indha research mudiya innum evlo naal ahum?’

‘Maybe 1 mnth.’

‘Success ahidum dhana ma'am?’

‘Already unkita sonnadhu dhan ma. 50/50 chance dhan.’

‘Nee kavala padadha Rev! Apdiye baby ku edhuvum achunna nanga thara amount vangitu un babyoda nee thala maraivaahidu.’

‘Yep, better hide ur head!’

‘😥😥’

‘Ennavo un baby madhiri feel pandra?😏 Evano orthan… adhuvum unnai yemaathinavanoda baby.’

‘What if she dies though?’

‘Mhum… maximum hemiparesis ahalam. Matha padi death ahara alavuku nanga onnum visha marundhu kandupidikala ma!😆😆’

‘Apdiye avan baby sethuta adhu un life a spoil pannadhuku, nee avanuku kudukara thandanaiya ninaichuko Rev!’

‘Unaku money dhana mukkiyam ma? Apram yen avan baby sethu pohumo nu feel pandra?’

‘Ok sir, Tharu illaya? Enga poitar?’

‘Ennai ketaa? Unaku dhan theriyum avana pathi😜’

‘Last 1 week ah avar enkita pesavey illa sir.’

‘Appo avlo dhan.’

‘1 mnth ah farm house poringaley… Totally ethana round poninga Rev?🙈 approximate ah sollu.’

படிக்கப் படிக்கக் கொதித்துப் போனாள் அம்ருதா. அருவருப்புடன் அலைபேசியைக் கட்டிலில் தூக்கி எறிந்தாள். “எப்டி அஸ்வத் அவனுங்களை சும்மா விட்டீங்க? எல்லா எவிடென்ஸையும் கலெக்ட் பண்ணுங்க. அவனுங்கள ஜென்மத்துக்கும் பிராக்டீஸ் பண்ண முடியாதபடி செய்யணும். எப்டி நீங்க இவ்ளோ பொலைட்டா இருக்கீங்க? நானா இருந்தா இந்நேரம் கொன்னு போட்டிருப்பேன்.”

அவளின் ஆத்திரத்திலும் ஆவேசத்திலும் பொய்த்தன்மையைக் கண்டறிய முயன்றான் அஸ்வத். இல்லையே! துளி கூட பொய்யில்லையே அவளிடம்! ஆத்திரத்தில் தன்னை மறந்து இவன் பெயரைச் சொல்லியிருந்ததையும் கவனிக்கவே செய்தான். ஒருவரைப் பரிச்சயம் இல்லாத பட்சத்தில் கோபத்தில் தன்னை மறந்து வெளிப்படாது.

அவளின் முகபாவங்களை ஆராய்ந்தவாறே நிதானமாகக் கேட்டான். “கொன்னுடலாமா டாக்டர்?”

“பின்ன? இவனுங்கள எல்லாம் விட்டு வச்சா இன்னும் எத்தனை குழந்தைகளோட உயிரை எடுப்பானுங்களோ! கேனிபல்ஸ்!” என்று பற்களை நறநறத்தாள்.

அஸ்வத் நிதானித்தான். இவளை வைத்து தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ள முடியும் என்று தோன்றியது. முன்பு நினைத்ததைப் போல் வேறு தகவல்களும் கிடைக்கலாம். அதாவது அம்ருவைப் போல் இன்னும் எத்தனை படிப்பாளிகள் மருந்து கண்டுபிடிப்பு என்று இறங்கியிருக்கிறார்கள் என்று இவள்‌மூலம் சுலபமாக தெரிந்துகொள்ள விழைந்தான். ஆங்கார ஸ்வரூபமாய் அத்தனைப் பேரையும் களையெடுத்திடவே, இவ்வளவு கதையை அவளிடம் சொல்லி நட்பு பாராட்டினான்.

இப்போது அம்ருவை இன்றே தீர்த்துவிட வேண்டும் என்று நினைத்திருந்த தன் திட்டத்தை தள்ளி வைக்க முடிவு செய்தான். 

“ஆர் யூ சீரியஸ்?”

“எஸ் ஐ’ம் சீரியஸ்… அந்த ரேவதி இப்போ எங்கே இருக்கா? நீங்க அவன் ஷேர் பண்ண அட்ரஸுக்கு போனேன் சொன்னீங்களே? யார் இருந்தா அங்கே? அது அவன் இடம் இல்லன்னு உங்களுக்கு எப்டி தெரியும்?”

சற்றுநேரம் எதையோ சிந்தித்தபடி மௌனித்திருந்தான் அவன்.

“அஸ்வத்!” என்ற அம்ருவின் அதட்டல் குரலில்,

சிந்தனைக் கலையாமலேயே, “ம்ம்! உங்ககிட்ட எப்டி சொல்றதுன்னு யோசிக்கறேன்.” என்றிட,

“யோசிக்கறதுக்கு என்ன இருக்குது? அங்கே என்ன நடந்துச்சோ அதை அப்டியே சொல்லுங்க!” என்றாள் கட்டளையாக!

எத்தனை உரிமையாக கேட்கிறாள் இவள்! விழிப்புடன் இருந்த அஸ்வத்தின் ஜாக்கிரதை உணர்வுகள் அம்ருதாவை அளவெடுத்துக் கொண்டே இருந்தன.

அன்று அஸ்வத் அந்த கடற்கரை பங்களாவின் வாயிற் காப்பாளனிடம் இயல்பாக பேச்சுக் கொடுத்து விசாரித்தான். “டாக்டர் சர் அப்பாயின்மெண்ட் கொடுத்திருக்கார். இன்னிக்கு வர சொல்லிருந்தார்.”

காவலாளி இவனைச் சந்தேகக் கண்ணோடு பார்த்தான். “எந்த டாக்டர்?” எனக் கேட்டவன் இவனுக்கு பின்னால் பார்த்துவிட்டு, “நீ மட்டுமா வந்த? பார்ட்டி வரல?” என்றிட,

அஸ்வத்திற்கு தலையும் புரியவில்லை; வாலும் புரியவில்லை. எந்தப் பார்ட்டியைக் கேட்கிறான்? “டாக்டர் தரு…”

“ஓ! நம்ம டாக்டர் தம்பியா? வழக்கமா அவர் ஞாயித்துக்கிழம தானே வருவார்? அதோட அவர் புரோக்கர் கிட்ட எல்லாம் போகமாட்டாரே? அவரே கையோட ஆளைக் கூட்டிட்டு வருவார். கொஞ்ச வயசா இருக்கியே… நீ எந்த ஏரியா புரோக்கர்’ய்யா?”

அஸ்வத்திற்கு விஷயம் மெல்ல புரிந்தது. “ஸாரி நான் புரோக்கர் இல்ல. டாக்டரோட ஃப்ரெண்ட்! அப்போ சண்டே வந்து பார்த்துக்கறேன்.”

“அய்ய மன்னிச்சுக்கோங்க சார். பார்ட்டியைக் கூட்டிட்டு வர்ற புரோக்கர்ன்னு நினைச்சிட்டேன். டாக்டர் தம்பி அனுப்பிவிட்டாரா? உள்ளே வாங்க!” என்றவன் மீண்டும் அஸ்வத்தின் பின்னால் பார்த்துவிட்டு, “பார்ட்டி நீங்க கூட்டிட்டு வந்திருக்கீங்களா? இல்ல நான் அரேன்ஜ் பண்ணவா சார்?” 

“நோ நீட்! அப்போ இது டாக்டரோட… ஐ மீன் தருவோட கெஸ்ட் ஹவுஸ் இல்லயா? என்னை அவன் கெஸ்ட் ஹவுஸ்ன்னு சொல்லி தான் யூஸ் பண்ணிக்க சொன்னான். இடியட்!” என்று கோபம் போல் பேசிட,

காவலாளி, “அட இதுக்கெல்லாம் கோவப்பட்டா எப்டி சார்? இந்த மாதிரி இடத்துல உண்மையை எதிர்பார்க்க முடியுமா? எனக்கே இது ஒரு டைரக்டரோட வீடுன்னு மட்டும்தான் தெரியும். யாரு எவருன்னு ஒண்ணும் தெரியாது. உங்களை மாதிரி பெரிய பெரிய ஆளுங்க பார்ட்டியைக் கூட்டிட்டு வருவாங்க. சிலர் எங்களையே அரேன்ஜ் பண்ணி தர சொல்லுவாங்க.” என்றான்.

“ஹோட்டல் மாதிரியா?” முகத்தைச் சுளித்து வீட்டைப் பார்த்தவாறு கேட்டிட,

“ச்சச்ச! அதெல்லாம் ஹோட்டலை விட சுத்தமா பராமரிக்கறோம் சார். மேனேஜர் இதுக்குன்னே தனியா நாலு வேலைக்காரங்களைப் போட்டிருக்கார்.” என்று பெருமை பேசினான் அவன்.

‘ஓ! இதுக்கு மேனேஜர் வேறயா?’ என்று கேட்க வந்தவன் வார்த்தைகளை விழுங்கிக்கொண்டான்.

“ஓகே! அப்போ நான் நாளைக்கு ஆளைக் கூட்டிட்டு வர்றேன். உங்க டாக்டர் கிட்ட எதுவும் சொல்லிக்க வேணாம். அவனை நான் தனியா கவனிச்சுக்கறேன்.” என்று அந்த தருவை தன் நண்பன் போலவே பாவித்துப் பேச,

“சரிதான்!” என்று சிரித்து விடைகொடுத்தான் காவலாளி.

அங்கே நடந்ததை அப்படியே சொல்லு சொல்லு எனும் அம்ருதாவிடம், தற்போது என்னத்தைச் சொல்லுவது என்றுதான் விழித்தான். “அப்டியே எல்லாம் சொல்ல முடியாது டாக்டர். சுருக்கமா சொல்றேன். அது அந்த தருவோட ஃபார்ம் ஹவுஸ் கிடையாது. யாரோ ஒரு டைரக்டரோட இடமாம்! அந்தாளோட கான்டாக்ட்ல இருக்கறவனுங்க இந்த மாதிரி வேலைக்கு யூஸ் பண்ணிக்கறானுங்களாம்.” என்று கட்டிலில் கிடந்த அலைபேசியைக் காட்டிச் சொன்னான்.

“இதுக்குன்னு தனியா ஃபார்ம் ஹவுஸ் எல்லாமா கட்டி வாடகைக்கு விடுவானுங்க?” என்று சிந்தனையுடன் ஒற்றை விரலை நாடியில் வைத்து தன்னை மறந்து கேட்டிருந்தாள் அம்ருதா.

அவளின் கேள்வியில் அவன்தான் முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்க வேண்டியிருந்தது.

“அப்போ நமக்கு இருக்கற ஒரே வழி அந்த ரேவதியைப் பிடிக்கறதுதான். அவ குழந்தையோட எங்கே ஓடிப் போனா? அவளைக் கண்டுபிடிக்க என்ன ஸ்டெப்ஸ் எடுத்தீங்க அஸ்வத்?”

சாதாரணமாக திரும்பியவன் உணர்வற்று சொன்னான். “ரேவதி இஸ் நோ மோர்!”

Some journeys are more than just roads🚗...

Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)