சீதையின் பூக்காடு - 12.2
அத்தியாயம் 12.2
ஏற்கனவே அந்த பெண்ணின் மேல் கோபத்தில் இருந்தவள், "ஹான்! அன்னிக்கு வந்த முதல் நாள் வகை வகையா பொண்ணுங்களை பார்த்துட்டேன்னு சொன்னான். இப்ப மட்டும் கற்பாம் கற்பு! மண்ணாங்கட்டி கற்பு!!" என்று எரிந்து விழுந்தாள்.
மையல் பார்வையோடு மோகமாய் புன்னகைத்தவன், "நான் அன்னிக்கு சொன்னது எனக்கே மறந்துடுச்சு. நீ இன்னும் ஞாபகம் வச்சிருக்கியா?" என்றவாறே அவளை நெருங்கினான்.
"நீ சொன்னது நிஜமா?" இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.
"நிஜமா இருக்கும்னு நினைக்கறியா?" இரண்டடி முன்னால் நகர்ந்தான்.
"பொய்யா இருக்கும்னு சொல்ல முடியல." இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.
"உண்மையா இருந்தா நல்லா தான் இருக்கும்." இரண்டடி முன்னால் நகர்ந்தான்.
நின்று முறைத்தாள் அவள்.
நடந்தவாறே சிரித்தான் இவன்.
அவளருகே சென்றதும் விலக விடாமல் பிடித்துக்கொண்டான். ஆரவிக்கு அதற்கு மேல் பேச்சு வரவில்லை. விலகிச் செல்லும் எண்ணமுமில்லை போலும். நேற்று போலவே அவள் பிறை நெற்றியில் தன் இதழ் ரேகையைப் பதித்தான் விபுநந்தன். ஆனால் நேற்று போல் இவள் முறைக்கவில்லை. அவன் மேல் புதிதாய் முளைத்திருந்த காதல் இன்று முறைக்க விடவில்லை.
"இங்கிருந்து போ ஆரவி. ப்ளீஸ்ஸ்... போய்டு!" அவன் குரலில் காதல் எக்கச்சக்கமாய் இழையோடி பிசிறடித்தது.
"ம்ம்! பயமா இருக்கு விபு..." - அடம்பிடிக்கும் குழந்தையின் முகம்.
"உன்னை பேபி மாமினு சொல்றது சரியா தான் இருக்குது. தனியா தூங்க பயப்படற?"
"நாலு நாளா தனியா தான் தூங்கினேன் தெரிஞ்சுக்கோ!" - அவன் நெஞ்சை முட்டியது ரோஷக்குரல்!
"இன்னிக்கு மட்டும் என்னவாம்?" - அவள் நெற்றியை உரசியது ஹஸ்கிக் குரல்!
"இன்னிக்கு தான் என் மனசு சொல்லுச்சு..."
"என்னன்னு?"
"விபு-வ நல்லவனா இருக்க விடாத'ன்னு!" என்று குறும்பாகக் கூறி சிரித்தாள்.
"அடிப்பாவி! இதுக்கு மேல நீ இங்கே இருந்தா நிஜமாவே என்னைக் கெட்டவனா ஆக்கிடுவ! ஒழுங்கா உன் ரூம்க்கு போ!" சற்று அதட்டலாகவே கூறினான்.
அவள், "ஹும் ஹும்! விபு..." என்று மூக்கை சுருக்கி சிணுங்கவும்,
அவனும் எத்தனை நேரம் தான் தாக்குப்பிடிப்பான்? அடங்கிய குரலில், "பேபீ!" என்றழைத்தவன் சட்டென இழுத்தணைத்துக் கொண்டு, அவள் காதை மறைத்தக் கூந்தலில் முகம் முழுவதையும் தோய்த்து, "ஐ ஜஸ்ட் லவ் யூ மாமி!" என்று பித்தமேறிய மொழி பேசினான்.
ஏற்கனவே நந்தனின் பார்வையில் அவன் மனம் இவளுக்கும் புரிந்திருந்தாலும், இப்போது அதை அவன் வாய்மொழியாகவேக் கூறி, ஆரவியின் இதயத்தில் தன் காதல் ராகத்தை இழைத்தான்.
அவளும் அவனை இறுகக் கட்டிக் கொண்டு, "லவ் யூ மோர் விபு." என்றாள்.
உணர்ச்சிமிகுதியில் தித்திப்பான கண்ணீர் எட்டிப் பார்த்தது. சற்றுமுன் அந்த பெண்ணின் செயலால் காயம்பட்டிருந்த மனம், 'என்னவன்! எனக்கு மட்டுமே உரியவன்!!' என்ற உரிமை உணர்வை நாடியது. எனவே, இன்னமும் அவன் சட்டையை அழுத்திப் பிடித்துக்கொண்டாள். அவளிடம் வேறுபாட்டை உணர்ந்து அவன் தான் விலக்கி நிறுத்தினான்.
"ஓய் மாமி! என்ன? எதுக்கு இப்ப இவ்ளோ இமோஷனல் ஆகற?"
"நத்திங் விபு!"
"ஹாஹா… பேபி!" என்று அவள் மூக்குத்திக்கு மோட்சம் தந்த மூக்கைப் பிடித்து ஆட்டினான், அவளின் 'நத்திங் விபு'விற்காக!
இமைக் கொட்டாமல் அவன் விழிகளைப் பார்த்தவாறே, "யூ ஆர் மைன்! மைன் டூ மீ விபு!" என்றாள்.
"ப்ச்! இப்ப யாரு இல்லனு சொன்னாங்களாம்? ஐ'ம் ஜஸ்ட் யுவர்ஸ். ஒன்லி யுவர்ஸ், பேபி!" மீண்டும் ஆரவியின் நெற்றி, 'முழுவதும் உனக்கே உனக்கு' என விபுநந்தனின் இதழுக்கு இடமளித்தது.
கள்ளூறும் காதல் விழிகளால் கதை பேசியவளின் மூக்குத்தியைத் தடவி, உதடுகளை வருடி, "வீசாதே மழை மேகம் எனக்கு...
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு…" என்று அவன் பாட,
அவன் அவஸ்தையில் குளிர்காய எண்ணி வேண்டுமென்றே, "அருகினில் வா அருகினில் வா
இடைவெளி வலிக்குதே...
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே…" என்று பாடிக் கிளுக்கிச் சிரித்தாள்.
"ராட்சசி! கொன்னுடுவேன் போடி!"
விளையாட்டை விடுத்து,
'நீ தரும் உச்சந்தலை முத்தம்
நில்லாமல் வேண்டும் நித்தம் நித்தம்!
முத்தத்தில் என்னுயிர் கொள்ளும் பித்தம்
முச்சூடும் விரும்பி ஏற்கவே சித்தம் சித்தம்!!' என மனதிற்குள்ளாக தான் கவிதை எழுதி மடித்தாள். அதை நீள் விழிகள் டிஜிட்டல் திரையிட்டு காட்டியதோ?!
"இனஃப் மாமி! இப்டியே நீ பார்த்துட்டு இருந்தா, ஐ வோண்ட் பீ இன் மை கன்ட்ரோல்!" என்றான், நான்கடி தள்ளி நின்று கொண்டு!
"ச்சு! யூ ஆர் பேட், விபு!" என்று உதட்டைச் சுளித்துவிட்டு போய்விட்டாள்.
"ஹாஹா... பயப்படாம என்னை நினைச்சிக்கிட்டே தூங்கு! ஹேவ் 'ஆர்விபு' ட்ரீம்ஸ்!" என்று சிரித்தபடி கதவை சாத்திவிட்டு தூங்கச் சென்றான்.
'விபு'விடம் நாளை அந்த பெண்ணைப் பற்றி சொல்லி விட வேண்டும்' என்று நினைத்துக் கொண்டே வெளியே வந்த ஆரவி ஏதேச்சையாக பார்க்க அவளறைக்கு அடுத்த... அதாவது மாடியின் இடப்புறத்தில் முன்னதாக இருந்த அறையின் கதவு, சாத்தி வைக்காமல் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. அப்போது தான் ஆரவிக்கு நினைவு வந்தது, மேலே உள்ள மற்ற அறைகளை இன்னமும் சோதனை செய்யவில்லையென!
எப்படியும் தூக்கம் வரப் போவதில்லை. அந்த பெண் வேறு தன்னைத் தூங்க விடுவாளோ என்னவோ? இவனும் இப்படி துரத்திவிட்டு விட்டான். எனவே அந்த அறையையாவது பார்க்கலாம் என்றெண்ணி, மாடி ஹாலில் உள்ள விடிவிளக்கின் வெளிச்சத்தில் மெதுவாக சென்று அவ்வறையின் கதவைத் திறந்தாள்.
நெஞ்சுக்குள் அச்சம் படர, இருட்டுக்குள் மூழ்கியிருந்த அறைக்குள் தயங்கியவாறே சென்று ஸ்விட்ச் போர்டைத் தேடி விளக்கைப் போட, ஆரவியின் இதயம் ஒரு முறை எகிறி குதித்தது. ஓர் மூச்சுத் திணறலோடு நெஞ்சின் மேல் கை வைத்துக்கொண்டாள்.
காரணம், அறையின் நடுவில் இருந்த வட்ட வடிவ கட்டிலில் அந்த அரூபப் பெண் அமர்ந்திருந்தாள். ஏற்கனவே பார்த்திருக்கிறாள் தான் என்றாலும், இப்போது விளக்கைப் போட்டதும் திடுமென பார்த்ததும் ஆரவி பயந்துவிட்டாள்.
அந்த பெண்ணும் இவளைப் பார்த்ததும், "பயந்துட்டியா? ஸாரி ஆரவி." என்று வருந்தியவள் சற்று வியப்பாக, "நீ இன்னும் தூங்க போகலயா?" என்று வினவினாள். இந்தப் பெண் இங்கே ஏன் வந்தாள் என்ற கேள்வி மனதில் தோன்றி மறைந்தது.
அவளைக் காட்டமாக பார்த்த ஆரவி, "யாரு நீ? விபு ரூம்க்கு நீ எதுக்கு போன? அதுவும் நான் வரும் போது என்ன பண்ணிண்டு இருந்தே!" என்று முகத்தை சுளித்தாள்.
அவள் உருவமில்லா அரூபம் என்றாலும் கூட, அவள் செய்ததை ஆரவியால் ஜீரணிக்க முடியவில்லை. அத்தனை தூரம் விபுநந்தனை நெஞ்சில் நிறைத்து வைத்திருக்கிறாள். இவளின் இந்த ஜென்மம் முழுதும் அவன் தரும், நெற்றி முத்தங்களை மட்டுமே கடன் வாங்க சித்தமாயிருக்கிறாள். அவனின் பெருங்காதல் தன் மரணம் மட்டும் வேண்டுமென பேராசை கொள்கிறாள். ஆதலாலேயே அப்பெண்ணின் செயலில் உண்டான கோபம் இப்படி வெளிப்படுகிறது.
"ஆரவி! ஜஸ்ட் ஸ்டாப் யுவர் நான்சென்ஸ் டாக்!" என்ற அவளின் குரலில் கன்டனம்!
"அப்டி தான் பேசுவேன். நீ மட்டும் சென்ஸோடவா செஞ்ச? ச்சை! கருமம்!"
"ஆரவீஈஈ!!" அவளின் சாந்த முகம் நொடியில் நெருப்பாய் மாறி ஜொலித்தது. கண்களின் பிரகாசம் இன்னும் கூடியது. இதழ்கள் இறுகி, பற்கள் நெறிபடும் சப்தம் அந்நிசப்த அறையில் அபஸ்வரமாய் கேட்டது.
ஆரவி எச்சிலை விழுங்கி அச்சத்தோடு சுவரை ஒட்டியவாறு நின்றாள். கழுத்திலிருந்து இறங்கிய வியர்வைத் துளி பயமாய் தொண்டைக் குழியில் தஞ்சம் புகுந்தது.
அதைப் பார்த்ததும் சட்டென தணிந்த பெண், "ச்சச்ச... ஆரவி! பயப்படாத! நீ நந்தாவை விரும்பற இல்ல? அதான் என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு கோவப்படற? ம்ம்??" என்று நொடியில் முக பாவனையை மாற்றி கனிவாய் புன்னகைத்தாள்.
ஆரவி பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அவள் மனம் புரியவே, "ஆரவி! அந்த டேபிள் ட்ரா'ல ஒரு சாவி இருக்கும். அதை எடுத்து இந்த சின்ன கப்போர்ட் இருக்குது பாரு! அதைத் திறயேன்..." எனவும்,
"நீ யாருனு இன்னும் சொல்லவே இல்லயே?" வெடுக்கெனக் கேட்டாள் இவள்.
"சொல்றேன் ஆரவி. அதுக்கு தான் அதைத் திறக்க சொன்னேன்." எனவும்,
மெதுவாக சென்று சாவியை எடுத்து அவள் சொன்ன அந்த அலமாரியைத் திறந்தாள்.
"அந்த நடுத்தட்டுல நிறைய ஃபோட்டோ ஆல்பம்ஸ் இருக்கும். அதை எடு!"
எடுத்தாள்.
"ம்ம்! திறந்து பாரு ஆரவி."
திறந்தாள்!
பார்த்தாள்!!
திகைத்தாள்!!!
பூக்கும்🌻🌺
Comments
Post a Comment