அத்தியாயம் 26 வியாழக்கிழமை காலையில் ஆரவி தலையைத் துவட்டியவாறே, "விபு! காஃபி ரெடியா?" எனக் கேட்டவாறே கீழிறங்கும் போது, மிகச் சரியாக அதே நேரத்தில் விபுநந்தனின் குடும்பத்தினர் அனைவரும் உள்ளே வந்தனர். விபுநந்தன் சமையலறையில் வழக்கம் போல் ஷார்ட்ஸூம் டீ-ஷர்ட்டுமாகவும், காதில் வாக்மேனுடனும் நின்று பாத்திரத்தை உருட்டிக் கொண்டிருந்தான். குட்டிப் பையன் யதுநந்தன் ஓடி வருவதை திறப்பு வழியே கண்டவன், தோளில் கிடந்த கிச்சன் கிளாத்துடன் வெளியே வந்து அனைவரையும் பார்த்துவிட்டு ஆடு திருடிய கள்ளனைப் போல் திருதிருவென முழித்தான். ஆரவியையும் தம்பியையும் மாறி மாறிப் பார்த்த தான்யா, "அடப்பாவிஈஈ!!! சொன்ன மாதிரி நிஜமாவே இந்த பொண்ணைக் கடத்திட்டு வந்துட்டியா?" என்று அநியாயத்திற்கு அதிர்ந்து போய் வாயைப் பொத்தினாள். "என்னாதூஊஊ!!! பொண்ண…. கடத்திட்டு வந்துட்டானாஆஆ?? ம்மா! ம்மா!! இவன் செய்யாதது இந்த ஒரு வேலை தான்மா! இப்ப அதையும் செஞ்சிட்டான். போச்சு போங்க! நாளைக்கு நீங்க லேடீஸ் க்ளப்ல எப்டிமா தலை நிமிர்ந்து நடப்பீங்க? அய்யகோ!!!" என்று ரிஷிநந்தன் வேண்டுமென்றே ஏற்ற இறக்கத்தோடு கண்களை உருட்டி உ...