ஸ்கார்பியோ காதல் - 13.2

ஸ்கார்பியோ காதல்

அத்தியாயம் 13.2


அவனுக்கு ஆறுதலாக அருகே அமர்ந்து கைப்பிடித்துக் கொள்ள நினைத்தவள், உள்ளத்தையடக்கி வார்த்தையால் அவனை வருடினாள். “சர்… ஐ க்நோ இட்’ஸ் யோர் டிஃபிகல்ட் டைம். ஆனா நீங்க கடந்து வரணும்! வாங்க சர்! ஐ’ம் ஹியர் டூ ஹெல்ப் இன் எனி வே ஐ கேன்.” என்றவளை நிமிர்ந்து பார்த்தான். 

இறை தூதாய் வந்தவள் போல் தெரிந்தாள் அம்ருதா. ஒரு க்ஷணம் அவளையும் தான் கொல்லத்தான் போகிறோம் என்பதை மறந்துதான் போனான் அஸ்வத்.

“அன்னிக்கு அந்தக் காட்டுல கார்ல தூங்கிட்டு இருக்க மாதிரி இருந்த பேபியோட முகம் இன்னும் என் தூக்கத்தைக் கெடுக்குது. நான் ரிஸ்க் எடுத்து உங்க வீடு வரை வந்திருக்கறது கூட அதனாலதான்! ப்ளீஸ்… கன்ட்ரோல் யோர்ஸெல்ஃப்! உங்க அம்முக்குட்டியோட இழப்புக்கு ஜஸ்டிஃபை பண்ண வேணாமா? அதுக்காகவாவது கடந்து வாங்க சர்…” அம்ருதா குரல் வழியே இதமாய் அஸ்வத்தைத் தழுவினாள்.

அன்றும் இவள்தான் அவனுக்கு வாழ வேண்டுமென்ற எண்ணத்தை விதைத்தாள். இன்றும் அவன் துயர் துடைக்க சுக வார்த்தைகளை மடித்து நீட்டுகிறாள். ‘பாஸிட்டிவிடி பேக்கேஜ்!’ எனச் சொன்னது சாலச்சிறந்ததே என்று தோன்றியது.

தன்னிலை அடைந்த அஸ்வத் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்துபோய் முகம் கழுவினான். அவன் வரும்போது அம்ருதா அடுப்படியில் பாலைக் காய்ச்சிக் கொண்டிருக்க, காபித்தூளும் சர்க்கரையும் சேர்த்து இருவருக்கும் குளம்பி தயாரித்தான் அவன்.

தன்னதை எடுத்துக்கொண்டு முன்னே நடந்த அம்ருதா, “இங்கே வேணாம் சர்!” என்று நீள்விரிக்கையைக் கடந்து சுவரோரமாகப் போடப்பட்டிருந்த திவானருகே செல்ல,

“அம்முவும் நானும் இந்த திவான்ல தான் படுத்திருப்போம்.” என்றான் அவன்.

இவள் நின்று திரும்பிப் பார்க்க, இடக்கையில் கோப்பையுடன் நின்றவன் கலங்கிய முகத்துடன், தலைதாழ்த்தி வலக்கையால் மார்பைத் தொட்டுக் காண்பித்தான். “இங்கே… இங்கே தான் அம்முக்குட்டி தலை வச்சு படுத்திருப்பா…” 

‘அய்யோ!’ என்றிருந்தது இவளுக்கு. இத்தனைக்கு மனதோடும் மகள் மீதான உணர்வோடும் போராடிக் கொண்டிருக்கிறானே… இவனை எப்படி மீட்டெடுப்பது? ஏதேனும் செய்துவிட வேண்டி அம்ருவின் உள்ளம் பரபரத்தது.

இங்கே அஸ்வத் தரையில் கிடந்து கதறியது அவள் மனத்தைப் பெரிதாய் பாதித்ததாலேயே திவானில் அமர வந்தாள். இப்போது திவானையும் புறக்கணித்துவிட்டு, சற்றுமுன்னர் தாங்கள் பேசிக் கொண்டிருந்த ரேவதியின் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த பால்கனியில் போய் நின்றுகொண்டாள்.

சில நொடிகளின் பின் நிகழ்கணம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்த அஸ்வத், அம்ருதா அங்கில்லாததைக் கண்டு, உள்ளே எட்டிப் பார்த்தான். வாசலுக்கு நேரே பால்கனியில் நின்று ஏதோ தீவிர சிந்தனையுடன் குளம்பியை உறிஞ்சிக்கொண்டிருந்தாள். 

இந்த டாக்டர் பெண்ணிடம் அடிக்கடி தன் இயல்பை மீறி, தன்னிலை மறப்பதற்கு தன்னையே நிந்தனை செய்தான். பல்லைக் கடித்து கண்மூடி இடவலமாகத் தலையசைத்து உள்ளூர, ‘பீ ஸ்ட்ராங், அஸ்வத்!’ என்றவனுக்கு அப்போதைக்கு அவள் பாதத்தைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

“ஏன் பேபிக்கு உடம்பு சரியில்லாதப்போ டிராவல் பண்ணீங்க? அன்னிக்கு அவ்ளோ தூரம் போக வேண்டிய அவசியம் என்ன? எந்த ஊருக்கு போயிட்டு வந்தீங்க?” அவன் முகம் கழுவியதில் இன்னும் முன்னுச்சியில் சிலும்பி நிற்கும் நீர்த்துளிகளைக் கண்டும் காணாதவளாய் அவன் விழிகள் பார்த்து வினவினாள் அம்ருதா.

ஆமோதிப்பாய்த் தலையசைத்தவன், “சொல்றேன் டாக்டர். அம்முவுக்கு ஃபிட்ஸ் வந்தன்னிக்கு அவளை ட்ரீட் பண்ண டாக்டர், காலைல குழந்தைக்கு சாப்பிட என்ன கொடுத்தீங்கன்னு கேட்டார். நான்தான் இட்லி ஊட்டி விட்டேன். கூடவே வந்திருந்த மெய்ட் ரேவதி பேக்கேஜ்டு ஜூஸ் கொடுத்ததா சொன்னாங்க. நான் அம்முவுக்கு எப்பவுமே பேக்கேஜ்ட் ஐட்டம்ஸ் பழக்கப்படுத்தினதே கிடையாது. ஆனாலும் அது உயிர் பறிக்கறளவுக்கு போகுமா என்னன்னு குழப்பம். அந்த டாக்டர் சொன்னது இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்குது.”

‘எக்ஸ்பைரி ஆனதா இருந்தா ஃபுட் பாய்ஸன் ஆகச் சான்ஸ் இருக்குது. பட் சம்திங் எல்ஸ் இஸ் ப்ளேயிங் இன் திஸ் ஸ்ட்ரேன்ஞ் கேஸ், மிஸ்டர் அஸ்வத். குழந்தை உடம்பு நம்ம மருந்தை ஏத்துக்க மறுக்குது. என் அனுபவத்துல இப்டி சடன் சேஞ்சஸ் நான் பார்த்ததில்ல. ஸோ சம்திங் எல்ஸ் இஸ் இன்டர்ஃபியரிங் இன் ஹெர் பாடி… லைக் வைரஸ் ஆர்… சம் டாக்ஸிக் ரியாக்ஷன்… லேப்ல இருந்து டெஸ்ட் ரிப்போர்ட் வரட்டும். லெட்’ஸ் வெய்ட்!’

“அதுக்கப்புறம் தான் நானும் வேற மாதிரி யோசிக்க ஆரம்பிச்சேன். ரேவ்ஸ் ஆரம்பத்துல நீங்க சொன்ன மாதிரி இன்செக்யூர்ட் ஃபீல்ல என் கூட சண்டை போட்டாளே… ஸோ இந்த வீட்ல அவளோட குழந்தைக்கு இடைஞ்சலா இருக்கறது என் அம்மு தானே? அப்போ அவ ஏன் அம்முவை அழிக்க நினைச்சிருக்கக் கூடாது?”

பின்னர் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் உடலில் இரத்தத்தில் புதுவித வேதியியல்புடைய பொருள் கலந்திருப்பதாக தெரிய வர, ஆடிப்போய் விட்டான் அஸ்வத். 

எதிரிலிருந்த அந்த மூத்த மருத்துவரைக் கண்டு, “டாக்டர்?” என்றதற்கு மேல் பேச்சே எழவில்லை அவனுக்கு.

“அது என்ன விதமான டாக்ஸின்னு பார்க்க சொல்லிருக்கேன். எக்ஸாக்ட்டா தெரிஞ்சிட்டா நாம ஆன்டிடோட் கொடுத்து பேபியைப் பூரணமா குணப்படுத்திடலாம் மிஸ்டர் அஸ்வத்! டோண்ட் வொர்ரி!” அந்த மருத்துவர் நம்பிக்கையளிக்கும் விதமாக பேசியதில் திருப்தியடைந்தாலும், அவர் அடுத்து சொன்ன விடயத்தில் குழம்பினான்.

“குழந்தையை ப்ளே ஸ்கூல் அனுப்புறதா சொன்னீங்க இல்ல? அங்கே எல்லாரும் நம்பிக்கையானவங்க தானான்னு செக் பண்ணுங்க. மத்தபடி எப்பவும் குழந்தை கூடவே இருக்கறதா சொல்றீங்க. நல்லா யோசிங்க அஸ்வத். பேபி கிட்ட பேசுங்க. தெரியாதவங்க யாரும் மீட் பண்ணாங்களா? ஊசி அல்லது மருந்து கொடுத்தாங்களான்னு கேளுங்க. உங்களுக்கு சந்தேகம் ஏதும் வந்தா உடனே போலீஸுக்கு போயிடுங்க.”

அதன்பின்னரே முழுமூச்சாக ரேவதியைக் கண்காணிக்க ஆரம்பித்தான் அஸ்வத். அவனுக்கு சந்தேகமெல்லாம் அவள்மேல் தானே? குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்காக ஒரு வாரத்திற்கு விடுப்பு எடுத்திருந்தவன் வீட்டில் தான் இருந்தான்.

வீட்டிலிருந்த வரை சில நேரங்களில் ரகசியமாக அலைபேசுதல் அல்லது தட்டச்சுதல் என்று இருந்தாள் ரேவதி. முன்பும் அவள் இப்படித்தான் இருந்தாள். ஆனால் அப்போது கண்டுகொள்ளாமல் இருந்தவன் இப்போது, ‘யார்க்கிட்ட பேசற?, உன் கசின் வீடு எங்கே இருக்குது?, டைப் பண்ணிட்டே இருக்கியே? க்ரூப் கான்வோ’வா?’ போன்ற கேள்விகள் எழுப்ப ஆரம்பித்தான். 

அவள் குழந்தையுடன் விளையாட வரும்போது அழற்சி உண்டாகும் என்று சொல்லி குழந்தையை அவளிடம் தர மறுத்தான். அப்படியே தந்தாலும் இவனும் அவர்களோடு அமர்ந்துகொண்டு அம்முவைக் கண்முன்னேயே வைத்திருந்தான். ஆச்சரியமாக அந்த நாட்களில் தந்தையின் கவனிப்பில் குழந்தை நன்றாகவே தேறினாள். 

அடுத்த வாரத்தில் மருத்துவரிடம் காண்பித்துவிட்டு அவரின் அறிவுறுத்தல்களை, ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு மீண்டும் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பினான். மகளின் நினைவில் தன் புறத்தோற்றத்திலும் அக்கறையில்லாமல் பரட்டைத் தலையும் தாடியுமாக இருந்தவன், தானும் பணிக்கு புறப்பட்டான்.

அத்துடன் ஒரு டிடெக்டிவ் ஏஜென்ஸியை அணுகி ரேவதியைக் கண்காணிக்கும்படி கேட்டுக்கொண்டான். அதில் வந்த தகவலின்படி ரேவதி அன்று வீட்டை விட்டு எங்கும் செல்லவில்லை. அன்று மட்டுமல்ல; அந்த வாரம் முழுவதுமே அவள் எங்கும் செல்லவில்லை. 

சரியான நேரத்திற்கு காத்திருந்தவள் போல் அடுத்த வாரத்தில் ஓர் நாள், “ரெண்டு நாள் என் கசின் வீட்டுக்கு போயிட்டு வர்றேன்.” என்று அஸ்வத்தின் முன் வந்து நின்றாள்.

முன்பு போல் விட்டேற்றியாக இராமல், “ஓகே, வா! நானே ட்ராப் பண்றேன்.” என்று எழுந்தவனைக் கலவரத்துடன் பார்த்தாள். 

அதனை அட்சர சுத்தமாக உள்வாங்கிக் கொண்டான் அஸ்வத். “வாட்?”

“ம்ம்? ஒண்ணுமில்ல. நீங்க காரை எடுங்க. நான் பேக் எடுத்துட்டு வர்றேன்.”

சற்று நேரத்தில் குழந்தையுடன் வந்து மகிழுந்தில் ஏறியவள் செல்ல வேண்டிய இடத்தைக் குறிப்பிட, அஸ்வத்தின் ஸ்கார்பியோ அந்த பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பின் முன்னே சென்று நின்றது.

“அது எந்த ஏரியா? அவ சொன்னது நிஜம் தான்னு கன்ஃபர்ம் பண்ணீங்களா? அந்த கசினை நீங்க பார்த்தீங்களா?” என்று பரபரத்தாள் அம்ருதா.

“ம்ம், பார்த்தேன் டாக்டர். கேட் பக்கத்துலயே அந்தப் பொண்ணு நின்னுட்டு இருந்தா! என்கிட்ட, ‘உங்க வைஃப்’அ ரெண்டு நாளைக்கு மறந்துடுங்க’ன்னு ரொம்ப கேஷூவலா பேசினா!”

“ஓஹோ! வைஃப்’ஆமா?” என்று கோபமாகப் பல்லைக் கடித்து கன்னக்குழி வரை சிவந்த அம்ருவை,

‘ஏனிந்த கோபம்?’ என்று பார்த்தாலும் சிரிப்பும் வந்தது அவனுக்கு.

“சிரிக்காதீங்க அஸ்வத்! அவ மேல டௌட் வந்தப்பவே நாலு அறையை விட்டு கேட்டிருந்தா இப்போ இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க வேண்டியதில்லை.”

கோபம் வரும் போதெல்லாம் இந்த டாக்டர் பெண் உரிமையாகத் தன் பெயரைச் சொல்கிறாள் என்பதை அவதானித்துக் கொண்டே அவளுக்கு பதிலளித்தான் அஸ்வத். “எனக்கும் அப்பப்போ இது தோணும் டாக்டர். ஆனா அப்போ எனக்கு இது பத்தி எந்த ஐடியாவும் இல்லயே… அவளை விட்டு பிடிச்சா தான் உண்மையைத் தெரிஞ்சுக்க முடியும். அவளும் என்கிட்ட இருந்து தப்பிச்சு போய்ட கூடாதுனு ராங் கால்குலேட் பண்ணிட்டேன்.”

“சரி விடுங்க. அப்போ உண்மைலயே அவ சொன்ன கசின் மேட்டர் நிஜம்தானா?”

“அப்போதைக்கு உண்மைன்னு தான் நான் நினைச்சேன். உடனேயே என்னோட டிடெக்டிவ் ஆளுக்கும் அந்த அப்பார்ட்மெண்ட் லொகேஷனை ஷேர் பண்ணேன். ஆனா ரெண்டு நாளும் அவளோ அவளோட கசினோ வெளியே எங்கேயுமே போகலன்னு சொல்லவும் சந்தேகம் வந்து, உள்ளே விசாரிக்க சொன்னேன். அப்போ தான் அங்கே அந்த பொண்ணோட வீடே இல்லன்னு தெரிஞ்சது.”

“ஸோ நீங்க அன்னிக்கு கேட்லயே டிராப் பண்ணிட்டு போன பிறகு அவங்க ரெண்டு பேரும் வேற எங்கேயோ போயிருக்கணும்.”

“எஸ்! உடனேயே அவளோட நம்பரை ட்ராக் பண்ண சொன்னேன். அவன் பார்த்துட்டு அது நம்ம வீட்டுல தான் இருக்குதுன்னு சொன்னான். எனக்கு கொஞ்சம் ஷாக்! எதுவோ தப்பா இருக்குதேன்னு தோணுச்சு. மெயின் கேட் கேமரால செக் பண்ணேன். அவ வீட்டுக்கு வந்த மாதிரி தெரியல. அப்போ நான் கம்பெனில இருந்ததால உடனே கிளம்பி வரவும் முடியல. அண்ட் கொஞ்ச நேரத்துல அம்முவைக் கூப்பிட கிளம்பணுமேன்னு வெய்ட் பண்ணேன்…”

அன்றைய நாளை நினைத்துக்கொண்டானோ என்னவோ! அஸ்வத்தின் விழிகள் சற்றுநேரம் உயிர்ப்பைத் தொலைத்தன. 

“சர்…”

இமை தட்டியவன் நெடு மூச்சுடன் தொடர்ந்தான். “நான் கோட்டை விட்ட அந்த அரைமணிநேரம் தான் டாக்டர் என் அம்முவைக் காவு வாங்கின நேரம்!”

“புரியல.”

நிமிர்ந்து அம்ருவின் முகம் பார்த்தான். “அம்முவை நான் கூப்பிட போறதுக்கு முன்னாடியே அவ வந்து கூட்டிட்டு போயிட்டா!”

“ஓ ஹெல்!”

“நான் செஞ்ச இன்னொரு தப்பு ஸ்கூல்ல அம்முவை இனி ரேவ்ஸ் கூட அனுப்ப வேணாம்னு சொல்லாம விட்டது! ப்ச்! நான் இவ்ளோ தூரத்துக்கு யோசிக்கல டாக்டர்.” என்று வேதனையுடன் நெற்றியில் படீரென அடித்துக் கொண்டதில் அம்ருதாவின் உயிர் தவித்தது.

இரண்டெட்டு எடுத்து வைத்து மரியாதையான தூரத்தில் நின்றுகொண்டு ஆறுதலாகச் சொன்னாள். “நமக்கு ஒருத்தவங்களை ரொம்ப பிடிச்சதுனா அவங்க மேல வச்ச அன்போட சேர்ந்து, எந்தவித சோதனையுமில்லாம தன்னால அவங்க மேல நமக்கொரு நம்பிக்கையும் வந்துடும். ஒருவேளை அந்த நம்பிக்கை உடையும் போது நம்மளால ஏத்துக்க முடியாம கஷ்டப்பட்டிருப்போமே தவிர அவங்கள வெறுத்திருக்க மாட்டோம் சர். அது மாதிரிதான் நீங்களும் அந்த ரேவதியை வீட்டுக்குள்ளே சேர்த்திருப்பீங்க. அவ மேல சந்தேகம் வந்தப்போ கூட, அவ மேல இருந்த அடிப்படை அன்பு உங்களை அடுத்த ஸ்டேஜ்க்கு நகர விடாம செஞ்சிருக்கும். அதனாலதான் நீங்க அவளை இந்தளவுக்கு சீரியஸா யோசிச்சிருக்க மாட்டீங்க. ஸோ இதுல நீங்களே உங்களை ப்ளேம் பண்ணிக்கறதுல அர்த்தமில்லை சர்!”

உதட்டை வளைத்து எள்ளலாகச் சிரித்தான் அஸ்வத். “மே பீ! பட் ஒரு ஸ்டேஜ்ல நான் விருப்பு, வெறுப்பு எல்லாத்தையும் தாண்டிட்டேன் டாக்டர்.”

சட்டென அவன் சிரிப்பு மீண்டதும் இவளின் புருவம் சுருங்கியது. “பார்டன்?”

அதற்கும் சிரித்தான். ஆனால் பதில் சொல்லவில்லை. “அன்னிக்கு ஸ்கூல்ல இருந்து அம்முவை அவ அழைச்சிட்டு போயிட்டான்னு தெரிஞ்சதும் சட்டுன்னு ஒரு பதட்டம்! திரும்ப கேமரா செக் பண்ணேன். மெய்ட்க்கு கால் பண்ணி காலைல அவ வீட்டுக்கு வந்தாளான்னு கேட்டேன். ஏன்னா அவங்க பக்கத்துல சில வீடுகள்லயும் வேலை செய்றதுனால அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு! வரலன்னு சொன்னாங்க. வீட்டுக்கு வந்து பார்த்தப்போ அவளோட மொபைல் இந்த ஷெல்ஃப்ல இருந்தது. அவ ரெண்டு நாள் முன்னாடி கிளம்பும்போதே மொபைலை சைலண்ட் மோட்ல வச்சு இங்கேயே விட்டுட்டு போயிருக்கான்னு அப்போதான் புரிஞ்சது.”

“அப்புறம் எப்டி அவளைக் கண்டுபிடிச்சீங்க?” விரும்பத்தகாத கட்டம் வந்தே வந்துவிட்டது என்று உள்ளம் அடித்துக்கொண்டாலும், அஸ்வத் அவர்களிடமிருந்து குழந்தையை எப்படி மீட்டு வந்தான் என்று தெரிந்து கொள்வதில் உள்ளுக்குள் சிறு ஆர்வமும் இருந்தது அம்ருதாவிற்கு.

A journey of speed, secrets and something more🚗🫶

Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)