சீதையின் பூக்காடு - 22

அத்தியாயம் 22
"என்னைப் பத்தி அப்பப்போ கவலைப்பட்டாலும், இப்ப செலின் மேடமும் அஷ்மியும் குட்டி அஷ்மியோட சந்தோஷமா இருக்காங்க. அதுவே எனக்கு மனசு நிறைஞ்சு போயிருக்குது, ஆரவி." என்ற சீதாவின் கடந்த காலத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர முயற்சித்துக் கொண்டிருந்தாள் ஆரவி. ஆனால் அது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை.
அவள் அழக்கூடாது என்று கூறியும் குடம் குடமாய் அழுது தீர்த்தாள். சீதாவின் அறைக்கு காலையில் வந்தவள்தான். நேரம் மாலை நான்கு மணி ஆகிவிட்டது. விபுநந்தன் இத்தோடு ஐந்தாறு முறை வந்து அழைத்துவிட்டான். வர முடியாது என்று வீம்பாக இருந்தவள் சீதாவின் வற்புறுத்தலால் இப்போதுதான் வெளியே வந்துள்ளாள். வந்தவள் சீதாவையும் தன்னோடு வரவழைத்து, நேரே மொட்டை மாடிக்கு சென்றுவிட்டாள்.
"நான் எதுக்கு ஆரவி? இப்ப கண்டிப்பா நந்தா வருவான். ரெண்டு பேரும் பேசுங்க." எனவும்,
"ஆமா இங்கே என்ன ரொமான்ஸா பண்ணின்டு இருக்கோம்? ஒழுங்கா இருந்து உங்க பாசமிகு குழந்தே செஞ்ச அக்கிரமத்தை எல்லாம் நன்னா காது குளிர கேளுங்கோ!" என்று பொரிந்து தள்ளினாள்.
வேறு வழியில்லாமல் அமர்ந்த சீதா சற்று நேரத்தில் மதிய உணவினை எடுத்துக்கொண்டு வந்த தம்பியைப் பார்த்துவிட்டு, "பார்றா! எங்களுக்கு அம்மா டீ தந்தா எடுத்துட்டு போக முடியாதுன்னு சொல்லுவான். இப்ப உனக்காக ரெண்டு மாடி ஏறி சாப்பாடு எடுத்துட்டு வர்றான். ஹூம்ம்!!" என்று பெருமூச்செறிய,
"பொறாமைப்படாதீங்கோ!" என்று கிசுகிசுத்தாள் இவள்.
அருகே அமர்ந்த நந்தனிடம் பேச நினைக்கையில், "ஃப்ர்ஸ்ட் சாப்பிடு!" என்றவன் அவள் மறுக்கும் முன், "எனக்கு பசிக்குது பேபி. காலைல இருந்து சாப்பிடல தெரியுமா?" எனவும், அதற்கு மேல் மறுக்காமல் உண்டாள்.
சாப்பிட்டு முடித்ததும், "இங்கிருந்து எப்டி வெளியே போறது? இன்னும் கையைக் கட்டிண்டு தான் இருக்க போறியா?" எனக் கேட்க,
"நான் என்ன பண்றது? வந்த மறுநாளே கதவை உடைக்க டிரைப் பண்ணேன். முடியல! இங்கே இருந்து கீழே இறங்க நீ ஒத்துக்கல. எப்பவும் அந்த பக்கம் இருக்க ஊர்ல இருந்து ஆட்கள் அடிக்கடி வருவாங்க. தட்சிணாவுக்கு அங்கே நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. இந்த முறை என்னவோ யாரையுமே காணும்."
மழையில் மரங்கள் முறிந்து கிடப்பதால் ஆட்கள் யாரும் இந்த பக்கம் வரவில்லையென சீதா ஏற்கனவே இவளிடம் சொல்லியிருந்தாள்.
"சொல்லு பேபி மாமி, வாட் கேன் ஐ டூ?"
"ஆல்ரெடி யூ'வ் டன் ஆல் ஆஃப் திஸ் விபு." என்று நக்கலாகக் சொல்லிவிட்டு, "இது யாரோட ஆம்?" என்று, விபுநந்தனை அனைத்து உண்மைகளையும் கூற வைத்துவிடும் நோக்கோடு அவனிடம் வெகு தீவிரமாக கேள்விக் கேட்க ஆரம்பித்தாள்.
"அது…" என்றிழுத்த நந்தன் அவள் பார்வையில் இனியும் பொய்யுரைக்க விரும்பாமல், "நம்ம வீடு தான்!" என்றவன் அவள் முறைப்பில், "எங்க வீடு! போதுமா?" என்றான்.
"ம்ம்! நீ ஹோட்டல்ல வேலை செய்றேன்னு சொன்னதாவது உண்மையா? இல்ல அதுவும் பொய்யா?"
ஓரிரு நொடி மௌனத்திற்கு பின், "நிஜம்தான்! நான் அங்கே ஒன் ஆஃப் தி பார்ட்னரா வொர்க் பண்றேன்." என்று ஒன்றுமறியா பிள்ளை போல் கூற, பக்கத்தில் இருந்த சீதா பக்கென்று சிரித்துவிட்டாள்.
பின் ஆரவியின் முறைப்பில் அவளும் வாயை மூடிக்கொண்டாள்.
"நீ எப்டி இங்கே வந்த? நான் வரும் போது உன் வெகிகிள் எதுவும் வெளில இல்லயே? அப்போ... உன் ப்ளான்ல வேற யாரையும் கூட்டு சேர்த்திருக்கியோ?"
'இவள் இவ்வளவு நுணுக்கமாக ஆராய வேண்டுமா?' என நொந்துகொண்டு, "அப்டிலாம் யாருமில்ல. என் பைக்ல தான் வந்தேன். அது வீட்டுக்கு பின்னாடி உள்ள புதர்க்கு நடுவுல மறைச்சு வச்சிருக்கேன்." என்று உண்மையைக் கூறினான்.
"ஓ!" என்று உதட்டைக் குவித்து, இளக்காரமாக புருவம் உயர்த்தியவள், "மளிகை சாமான், காய்கறி எல்லாம் வாங்கி வச்சு பக்காவா ப்ளான் பண்ணிருக்க விபு! ப்ராவோ!!" என்று போலியாய்ப் புகழ,
"நோ பேபி! நான் எந்தப் ப்ளானும் பண்ணல." என்று வேகமாக மறுத்துவிட்டு, சீதா சொன்னது போல் தங்கள் வீட்டினர் அடிக்கடி இங்கு வந்து தங்குவதை விவரித்தான். "மோர்ஓவர் என் ஃப்ரெண்ட் இந்த வீக் எண்ட் ஸ்பென்ட் பண்ண வர்றதா சொன்னான். அதனால தான் எல்லா பொருளும் கொஞ்சம் அதிகம் வாங்கி வச்சேன். என்னாச்சு தெரியல. அவனையும் காணும்."
சிறிது நேர மௌனத்தின் பின், "நிஜமா தான்யாக்காகிட்ட சொன்னதுக்காகவாவது உன்னைக் கொஞ்ச நேரம் அலற விடணும்னு…" என்று சொல்லிக் கொண்டிருக்கையில் பெண்ணவளின் வதனம் கோபத்தில் சிவப்பதைக் கண்டு, "அது… அது… அப்டி இல்ல பேபி மாமி" என்று படபடத்தவன் ஒற்றைக் கண்ணை மூடி, முன்னிரு பற்களைக் கடித்துக் கொண்டு தனக்குத்தானே, "ச்ச சொதப்பித் தொலையாதடா நந்தாஆஆ..!" என்றுவிட்டு மீண்டும் அவள் முகம் பார்க்க, அவள் அவனைக் காணாமல் முகத்தை திருப்பிக் கொண்டிருந்தாள், மானங்கெட்ட மனம் இப்போதும்கூட அவனின் மேனரிஸத்தில் மயங்கித் தொலைகிறது என்ற உள்ளக் கொதிப்போடு!
தன் வாய்மொழியில் தான் கோபம் கொண்டு, தன்னைக் காண மறுக்கிறாள் என்றெண்ணியவன் சிறு குரலில், "கதைல யாருமில்லாத வீட்டுல ஒரு பையனோட, ஒரு பொண்ணைத் தனியா போட்டு பூட்டி வச்சிருக்கியே… அது மாதிரி நீயும் இருந்தா உனக்கெப்டி இருக்கும்னு புரியட்டும்னு தான்… நிஜமா வேறெந்த நோக்கத்துலயும் உன்னை இங்கே வர வைக்கல மாமி!" என்றான், பாவம் போல்!
"அப்ப உனக்கு என் மேல லவ் இல்ல? ம்ம்?? நான்தான் லூசு மாதிரி…"
அவளை முடிக்க விடாமல், "ஆமா ஆமா! நீ லூசு தான். இல்லைனா நான் தான்யாக்காகிட்ட என் பொண்டாட்டியைக் கடத்தி, என்னை லவ் பண்ண வைக்கறேன்னு சொன்னேனே… அதை நம்பாம இப்டி பேசுவியா?" என்று வாயைவிட்டு மாட்டிக் கொண்டான்.
'அய்யய்யோ மறுபடியும் உளறிட்டேனே… அவ்வ்வ்!!'
"சோ?? உன் பெட்-ல நீ ஜெயிச்சிட்ட. இல்ல விபு?" குரலில் அப்படியொரு அசாத்திய அமைதி! அதுவே பீதியாகிவிட்டது நம் நாயகனுக்கு.
"பேபி! பேபி!! அப்டிலாம் இல்ல பேபி. நான் அலாட் பண்ண டைம் அரைமணி நேரம்தான்! அந்த அரைமணி நேரத்துலயும் நீ என்னை வில்லனைப் பார்க்கற மாதிரி தான் பார்த்துட்டு இருந்த! அப்டி பார்த்தா நான் என் பெட்-ல தோத்து போயிட்டேன்னு தான் அர்த்தம்." என்று வேகவேகமாக பேசியவன், பின் சற்றே குரலைத் தணித்து மெதுவாக, "மோர்ஓவர், அந்த அரைமணி நேரத்துலயும் சரி; அதுக்கப்புறமும் சரி… நீ என்னை லவ் பண்ணனும்னு நான் எந்த முயற்சியும் எடுக்கவே இல்லையே மாமி?" என்றான்.
அது என்னவோ உண்மை தானல்லவா? ஆரவியின் மனம் தானே அவளின் அறிவு சொன்ன பேச்சைக் கேட்காமல் அவனிடமே தறிக்கெட்டு ஓடியது? எனவே அவன் முகம் பாராமல் பதிலற்று தரையையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். விபுநந்தன் மேலும் தொடர்ந்தான்.
"நான் லவ் சொல்லணும்னு தான் நினைச்சேன். ஆனா நீ ரொம்ப பயந்து அழ ஆரம்பிச்சதும் தான் எனக்கே நான் செஞ்ச தப்பு புரிஞ்சது. அப்ப உன்னை ரிலாக்ஸ் பண்ணனும்னு தான் தோணுச்சே தவிர, ப்ரொபோஸ் பண்ணனும்னு தோணல மாமி."
"என்னை எங்கே பார்த்த விபு? நான் வெளி இடங்களுக்கு போறதை எல்லாம் சோஷியல் மீடியால ஷேர் பண்ண மாட்டேனே..?"
"அது… நான் தான்யாக்காகிட்ட பேசினப்புறம் உன் ஐடியைச் செக் பண்ணேன். சிட்டி அண்ட் உங்க பஞ்சாயத் நேம் இருந்தது. அதோட நீ அடிக்கடி செக் இன் பண்ணிருந்ததும் அதே லொகேஷன் தான். அதை வச்சு, உங்க வீடு இருக்க ஏரியா கண்டுபிடிச்சேன். அப்புறம் உங்க வீட்டை கண்டுபிடிக்க ரொம்ப நேரம் ஆகல." எனவும்,
'முதலில் அத்தனை கணக்குகளையும் பூட்டி வைக்க வேண்டும்' என்றெண்ணிக் கொண்டாள் ஆரவி.
"உன்னை முதல்முறையா நேர்ல பார்த்தப்ப… சொன்னா நம்பமாட்ட பேபி மாமி. எங்க சீதாக்காவை எழுதின பொண்ணா தான் பார்த்தேன். ஒரு… ஒரு மாதிரி… எக்ஸைட்டடா இருந்தது." என்று கண்கள் சுருக்கி, உள்ளங்கையை விரித்து தரையைப் பார்த்தவாறு வைத்துக்கொண்டு, இந்தப் புறமும் அந்தப் புறமுமாக சாய்த்து சாய்த்து பேசினான்.
அருகேயிருந்த சீதா கண்கள் கலங்க தம்பியைப் பார்த்திருந்தாள். எப்போதும் போல் இப்போதும் அவன் தலையைக் கோதிவிட இடக்கை நீண்டது.
"நீ பாட்டியோட உங்க வீட்டு திண்ணைல அந்த தூண்ல சாய்ந்து உட்கார்ந்து, மடில லேப்டாப் வச்சு டைப் பண்ணிட்டு இருந்த! அன்னிக்கு உங்கப்பா ஒரு ப்ளஷர்+'ஐக் கொண்டு வந்து நிறுத்திட்டு, பெட்ரோல் ஃபுல் பண்ணிட்டேன் சொன்னார். அப்ப என் மாமியார் வந்து..." எனும் போது ஆரவி முறைப்பதையும் பொருட்படுத்தாமல், "அவங்க ஊருக்கு போறதைப் பத்தி பேசினாங்க." என்றான்.
ஆரவிக்கு அன்றைய தினம் நினைவிலாடியது.
"நாங்க திரும்பி வர வாரம் பத்து நாள் ஆகும் ஆரவி. பத்திரமா இருந்துப்பியோன்னோ? உன்னை தனியா இங்கே விட்டுண்டு போக நேக்கு மனசேல்லடி." என்று அங்கலாய்த்த அன்னையை,
"இப்டியே உன் பொண்ணைக் கைக்குள்ளேயே வச்சிண்டிருந்தா அவ என்னைக்கு வெளியுலகம் பழகறது? தனியா இருந்து பழகட்டும். அப்டி ஒண்ணும் தொலைஞ்சு போயிட மாட்டா உன் செல்ல பொண்ணு." என்று கடிந்துகொண்டார் பரமானந்தன்.
ஆரவி, "நேக்கு ரெண்டு நாளைல இன்டர்வ்யூ இருக்கறதுமா. இல்லேன்னா நானும் உன்னோட வந்துட மாட்டேனா? நான் பத்திரமாவே இருந்துப்பேன். கவலைப்படாம போயிட்டு வாயேன்." என்று தன் பங்கிற்கு சமாதானப்படுத்தினாள்.
அன்று நடந்ததை இப்போது யோசிக்க, எதிர்வீட்டு லட்சுமி பாட்டி வீட்டு திண்ணையருகே ஒருவன் நின்று அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது.
அந்நினைவோடே நிமிர்ந்து நந்தனைப் பார்க்க, "ஹிஹி… அது நான்தான். மறுநாள் மதியம் வந்தப்ப அவங்க எல்லாரும் கிளம்பின கொஞ்ச நேரத்துல நீயும் எங்கேயோ கிளம்பின. அப்போ நானும் உன்னை ஃபாலோ பண்ணேனா... அப்புறம் அந்த பப்ளிகேஷன்ல வெளில நிறுத்தியிருந்த உன் வண்டில இருந்து கொஞ்சமா பெட்ரோல் எடுத்துட்டேன். நீ என் ப்ரொபோஸல்'அ அக்செப்ட் பண்ணலன்னா… திரும்ப போகும் போது நானே உன்னை பிக்கப் பண்ணி…." என்று பாதியிலேயே நிறுத்திவிட்டு கீழே குனிந்துகொண்டான்.
உள்ளே திகுதிகுவென எரியும் எரிமலையைக் 'கன்ட்ரோல் கன்ட்ரோல்' என்று பல்லைக் கடித்து கட்டுப்படுத்தியவாறே, "நேக்கு எப்டி கால் பண்ணின? மூணு வேற வேற நம்பர்ல இருந்து கால் வந்ததே?" என அடுத்தக் கேள்வியைக் கேட்டாள்.
'போலீஸாகவோ, வக்கீலாகவோ ஆகியிருக்க வேண்டியவள், தவறிப் போய் எழுத்தாளராகிவிட்டாள்' என்று மனதினுள் நினைத்தவன் வெளியே, "ஃபர்ஸ்ட் அந்த பப்ளிகேஷன் பக்கத்துல இருந்த லேண்ட்லைன் நம்பர்தான். அப்புறம் உனக்கு முன்னாடியே இங்கே வந்துட்டு என் நம்பர்ல இருந்து பண்ணேன். லாஸ்ட்டா எங்க தட்சிணா நம்பர்ல இருந்து!" என்றவன் மேலும் தொடர்ந்தான்.
"தட்சிணா அன்னிக்கு முழுதும் வரவே இல்லன்னதும் எனக்கே கொஞ்சம் ஜெர்க்காகிடுச்சு பேபி. சோ, எனக்கு அப்ப அவனை நினைச்சுதான் டென்ஷனா இருந்தது. ஆனா, மறுநாள் நீ ஹால் ஜன்னல் வழியா வேடிக்கைப் பார்த்துட்டு இருந்ததைப் பார்த்தப்ப... உன் கூட இப்டியே என் பொழுதை கழிச்சா தான் என்னன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு. அதான் நான் முதல் நாளைக்கப்புறம், வீட்ல இருந்து வெளியேறுறதுக்கு கூட எந்த முயற்சியும் எடுக்கல. உன் கூட மாடி பால்கனி ஊஞ்சல்ல உட்கார்ந்து பேசறதே மனசுக்கு இதமா இருந்தது. நீ முதல்முதல்ல 'விபு'ன்னு கூப்பிட்டப்ப… காலம் முழுக்க அதேமாதிரி அழைப்போட நீ என் பக்கத்துலயே வேணும்னு தோணுச்சு. ஆப்வியஸ்லி, உன் மேல ஆரம்பத்துல நான் அவ்ளோ சின்சியரா இல்லைதான் போல! அதான் விளைவு எப்டி இருக்கும்னு நான் பெரிசா யோசிக்கல. ஆனா… ஆனா… உன் கண்ணீரைப் பார்த்த அன்னிக்கு என் மொத்த கோவமும் தட்சிணா மேல தான் திரும்புச்சு. நீ சும்மா சும்மா மயங்கி விழும் போது இங்கே என் உயிர் துடிச்சதை நான் ஃபீல் பண்ணேன் பேபி!" என்று இருதயப் பகுதியைத் தொட்டுக் காட்டினான்.
காதல்தான்! அவனின் வாய்வழி வந்த ஒவ்வொரு வார்த்தையிலும் வழிந்தது, அவளுக்கான காதலேதான்!
இருப்பினும் அதை ஏற்றுக்கொண்டால் அவன் செய்த தவறு இல்லையென்றாகிவிடுமா என்ன? எனவே அவன் காதலை மனதிற்குள் ஒளித்து வைத்து பூட்டிவிட்டு, வெளியே அதைப் புறந்தள்ளியவளாய் அடுத்த கேள்விக்கு தாவினாள் ஆரவி.
"நேக்கு கால் பண்ணினேன் சொல்ற? அப்ப உன்னோட மொபைல் எங்கே போச்சு? இவ்ளோ பெரிய ஆத்துல… அதுவும் எல்லாரும் அடிக்கடி வந்து போவான்னு வேற சொல்ற? அப்டி இருக்கச்ச… இங்க இருந்த டெலிஃபோன் எங்கே போச்சு? அட்லீஸ்ட் மொபைலுக்கு யூஸ் பண்ற சார்ஜர் கூட இல்லியே விபு… எப்டி?"
'பாவி! எப்டியெல்லாம் கேள்வி கேக்கறா? இன்னும் இவக்கிட்ட நாம எப்டியெல்லாம் மண்ணைக் கவ்வணுமோ…' என்று உள்ளுக்குள் பரிதாபமாக அலறியவன் தன்னிரக்கத்தோடு, "இங்கே மேக்ஸிமம் சிக்னல் கிடைக்காதுனு தெரியும். இருந்தாலும் வந்ததுமே முதல் வேலையா இங்கே இருந்த லேண்ட்லைன் டெலிபோன், எல்லார் ரூம்லயும் இருக்க சார்ஜர், பவர் பேங்க் எல்லாம் எடுத்து வெளியே இருக்க தட்சிணா, கிருஷ்ணா தங்கற ரூம்ல போட்டுட்டேன்." என்று மேலே என்ன பட்சி பறக்கிறது என்று பார்ப்பவன் போல் பார்த்தவாறே சொன்னான்.
தான் இங்கே உள்ளே வரும் போது வெளியே சிறிய வீடு போல் இருந்ததை நினைவுபடுத்திக் கொண்டாள் ஆரவி. முதலிலேயே அங்கே சென்று எட்டிப் பார்த்திருக்க வேண்டுமென காலங்கடந்து சிந்தித்தாள்.
"ச்ச! எப்டியெல்லாம் ப்ளான் பண்ணி, நான் உள்ளே வர்றச்ச மயங்கினவன் மாதிரி நடிச்சு… அப்புறம் எழுந்ததும் நான் எங்கே இருக்கேன்னு கேட்ட பாரு... அதைத் தான்டா என்னால தாங்கவே… முடியல!" என்று வயிறெரிய,
"ஹாஹாஹா… அதுக்கு இந்திரலோகத்துல ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கேன்னு நீ சொன்னதும் எனக்கு சிரிப்பு அடக்க முடியல. ஹாஹாஹா.. அதான் முகத்தைத் துடைக்கற மாதிரி குனிஞ்சுக்கிட்டேன். ஹாஹா… நல்ல காமெடிசென்ஸ் பேபி மாமி உனக்கு." என்று சிலாகிக்க வேறு செய்தான்.
வாய்விட்டு பலமாக சிரித்தவனின் சிகையைப் பிடித்து ஆய்ந்து, முதுகில் கை வலிக்கும்மட்டும் அடியைக் கொடுத்து, "கிட்னி திருடறவா பிடிச்சு வச்சிருப்பா'ன்னு என்னை எப்டி கதி கலங்க விட்ட? அப்புறமும் நல்லவன் மாதிரி எனக்கு அட்வைஸ் பண்ணி என்னமா நடிச்ச பாவி! மஹாபாவி!! கடங்காரா!!!" என்று மனம் ஆறாமல் கண்ணகியாய் மூச்சு வாங்க முறைத்தாள்.
வலித்தாலும் அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டு, "அகெய்ன் அண்ட் அகெய்ன் ஐ ஃபால் இன் லவ் வித் யூ, பேபி மாமி! நீ இப்ப என்னை முறைக்கும் போது கூட!" என்று காதலாக உரைக்க,
"கடங்காரா! லவ்வா... உனக்கு லவ்வு? நான் போய் சேர்ந்திருந்தா..? பயத்துலயே செத்திருந்தா..? தட் இஸ் வாட் யூ வான்டட்? இஸ்ன்'ட் இட்?" என்று கத்தினாள்.
"அவ்ளோ சீக்கிரத்துல என்னைவிட்டு போக விட்டுடுவேனா? நீ பாதி உயிரா இருக்கும் போதே லிப் லாக் அடிச்சேன்னா பதறியடிச்சு எழுந்துட மாட்ட?" என்று உதட்டை வளைத்துக் கண்ணைச் சிமிட்டினான்.
"நோக்கு இதெல்லாம் விளையாட்டா தெரியறது இல்ல விபு? இன்னும் சீரியஸ்னெஸ் புரியாம இருக்க நீ! கோ டூ ஹெல்!" என்று மேலும் இரைந்து விட்டு கீழே போய்விட்டாள்.
"ப்ச்!" என்று சிகையை அழுந்தக் கோதியவன் அப்படியே அந்த பாசி பிடித்த தரையில், கோர்க்கவியலா நட்சத்திரங்களை சிதற விட்டிருந்த வானத்தை வெறித்தவாறு படுத்துவிட்டான்.
முதல்முறையாக தம்பிக்கு அதிக செல்லம் கொடுத்துவிட்டோமென வருந்தி, இருவரையும் நினைத்து கவலையோடு அமர்ந்திருந்தாள் சீதாலட்சுமி.
பூக்கும்🌻🌺
Comments
Post a Comment