Skip to main content

Posts

Showing posts from September, 2025
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...

ஸ்கார்பியோ காதல்🚗💌 - 7.2

Second meet🩷   அத்தியாயம் 7.2 வெள்ளை கோட்டை கழற்றியவள் வீட்டிற்கு புறப்படுவதற்கு ஆயத்தமாகி வெளியே வர, “அம்ரு மேடம், இவர் உங்களைப் பார்க்கணும்னு வெய்ட் பண்றார்.” என்றாள் செவிலியப் பெண்ணொருத்தி! “யாரு?” முதுகுப்பையைச் சரியாகத் தோளில் பொருத்தியபடி திரும்பிய அம்ருதா, யாரோ உயரமான ஒருவன் தன் முன் நிற்பது கண்டு விழித்தாள். அவள் தன்னை அடையாளம் காண இயலாமல் புருவம் சுருக்கியதில், சிறு புன்னகை அவனிடம்! “ஹலோ டாக்டர்! என்னை ஞாபகமில்லையா?” இப்போதும் அவளுக்கு அவன் முகம் அடையாளம் தெரியவில்லை. ஆனால் குரல் அவன் யாரென மின்னல் வெட்டாய் நினைவடுக்கிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இத்துடன் இலட்சத்தாயிரம் முறைகள் அன்றைய நிகழ்வையும் அவன் குரலையும் அசைப்போட்டிருப்பவளுக்கு அவன் குரல் அடையாளம் தெரியாமல் போகுமா? “சர்… நீங்களா? கால் பண்ணுவீங்கன்னு நினைச்சிட்டிருந்தேன்.” என்றவள், தங்களையே ஆர்வமாகப் பார்க்கும் செவிலியரிடமிருந்து விலகி, வெளியே நீண்ட வராண்டாவில் பழைய குழல் விளக்கிற்கு அடியில் போடப்பட்டிருந்த மர பெஞ்சில் வந்து அமர்ந்தாள். “உட்காருங்க சர்.” அவள் துல்லியமாக தன் குரலை ஞாபகம் வைத்திருப்பதில் அதிருப்...

ஸ்கார்பியோ காதல்🚗💌 - 7.1

Second meet 🩷   அத்தியாயம் 7.1 வண்ண விளக்குகளாலும் வாசமிக்க பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த மணமேடையில், பட்டுக் கட்டி, தங்க நகைகள் பூட்டி தன்னருகே ஜொலிக்கும் சந்தன சிலை போல் அமர்ந்திருக்கும் ஸ்வேதாவின் மீது அவ்வப்போது தன் காதல் பாணத்தைச் செலுத்தி அவளைச் சிவக்க வைத்துக் கொண்டிருந்தான் ஹரிஷ். நேற்று வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து, இன்று அவனுக்கும் ஸ்வேதாவுக்கும் திருமணம். மாங்கல்ய தாரணத்திற்கு இன்னும் சில கணங்கள்தான் இருக்கின்றன. “ஜஸ்ட் ஃப்யூ மினிட்ஸ்!” என்று குனிந்து அவள் காதில் உதடுகள் உரசச் சொல்லி, அவளின் வெட்கமெனும் வெப்பத்தில் குளிர் காய்ந்தான். தன் அலையாடும் கேசத்தில் குண்டு மல்லிச்சரத்தை அழகுற மடித்து வைத்து, அண்ணன் எடுத்துத் தந்த மயில் கழுத்து நிறக் காஞ்சிப்பட்டு பாவாடை தாவணியில், மழை வேண்டி நிற்கும் மயில் போலவே மிளிர்ந்தாள் அம்ருதா. வந்திருக்கும் விருந்தாளிகளிடம் அவள் பொறுப்புடனும் பொறுமையுடனும் பேசி உபசரிப்பதை திருப்தியுடன் பார்த்து உள்ளூர பெருமிதப்பட்டு கொண்டார் அவளின் அப்பா நடராஜன். மாப்பிள்ளை - பெண் என இரு வீட்டாரும் உயர் மத்திய தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் திரும...

விரிந்த கடலோடு நேசம்

  விரிந்த கடலோடு நேசம்  வாழ்க்கையில் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பொக்கிஷம் கிடைத்திருக்கும். அது ஒரு பொம்மையாகவோ, பேனாவாகவோ, உங்களுடைய குரலாகவோ, இல்லை... வேறு துறை சார்ந்த திறமையாகவோ, ஒரு கிரிக்கெட் மட்டையாகவோ, தோழனாகவோ, மனைவியாகவோ, காதலாகவோ இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த வகையில் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்திருப்பவர், என்னுடைய பொக்கிஷம் என்று நான் நினைக்கின்றவர்… என் அப்பா!  என்னுடைய ஒவ்வொரு செயல்களிலும் வழிகாட்டியாக இருந்தவர்! ஒவ்வொரு சறுக்கலிலும், 'எழுந்துக்கோ அர்ஜூன்!' என்று ஊக்கம் தந்தவர்! என் மனதில் விழும் எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறையாகவும், நேர்மையாகவும் சிந்திக்க கற்றுத் தந்தவர்! என் அப்பாவோடான நேரங்களையும், அவரின் நேர்மறை சிந்தனைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் ஐந்தாம் வயதில் என் தம்பி அஷ்வந்த் பிறந்தான். அப்போது எல்லா தலைச்சன் பிள்ளைகளையும் போல நானும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். ஒரு நாள் வீட்டின் பின்புற மாமரத்தினடியில் பறந்து செல்லும் தும்பிகளை வேடிக்கை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தேன். என்னருகே நிழலாடியது. ...

ஸ்கார்பியோ காதல்🚗💌 - 6.2

  அத்தியாயம் 6.2 பத்து நாட்கள் கடந்திருந்தன. அவன் தனது வலது கையில் பெருவிரல் மற்றும் சுட்டுவிரலுக்கு இடையில் அம்ருதாவின் விலையுயர்ந்த மோதிரத்தைத் தூக்கி பிடித்து பார்த்தவாறு நீள்விரிக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தான். “அம்ம்…முக்…குட்டி…” என நீட்டி முழக்கியவனின் இதழ்களில் நூறு விழுக்காடு கேலிப் புன்னகை! தன் நீளக் கால்களை விச்ராந்தையாக நீட்டிக்கொண்டு மனநிலை பிறழ்ந்தவன் போல் ஏதோவோர் பாடலைப் பாடியவன், “எப்டிடீ அந்த அத்துவான காட்டுக்குள்ளே என்னைத் தேடி வந்து என்கிட்ட சிக்கின?” என மோதிரத்தைப் பார்த்துக் கேட்டான். “ப்ச் ப்ச்! கடவுளா பார்த்து எனக்கு அனுப்பி வச்ச முதல் கிஃப்ட் நீ!” என்று எள்ளல் நகை புரிந்தவனின் பார்வை சடுதியில் விகாரமாக மாறி, சட்டென ஏக்கம் கொண்டு அருகிலிருந்த தன் மகளின் புகைப்படத்திற்கு தாவியது. அம்ருதாவின் மோதிரத்தைச் சட்டைப்பையில் பத்திரப்படுத்திக் கொண்டு மகளின் புகைப்படத்தைக் கையில் எடுத்தான். மூன்று வயதுக் குழந்தை! பிஞ்சு முகத்தில் அப்படியே அவனைப் பிரதியெடுத்திருந்தாள். புகைப்படத்தில் சின்னப் பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தவளின் கண்களில் வழிந்தோடும் உவகை! த...

ஸ்கார்பியோ காதல்🚗💌 - 6.1

Amru's secret and Scorpio guy's flashback   அத்தியாயம் 6 அண்ணனைச் சமாளித்துவிட்டோம் என்றெண்ணிக் கொண்டு விழி மூடியிருந்த அம்ருதாவின் சிந்தை முழுவதும் ஸ்கார்பியோகாரனும் அவனின் குழந்தையும் மட்டுமே நிரம்பியிருந்தனர். அப்போது தோன்றாத கேள்வியெல்லாம் இப்போது தோன்றி மூளையைக் குடைந்தெடுத்தது. குழந்தையை இந்த நிலைமையில் வைத்துக்கொண்டு ஏன் இவன் பயண வழியிலெல்லாம் வாகனத்தை நிறுத்தி நிறுத்தி வருகிறான்? இந்த மழை நேரத்திலும் கூட அந்த அத்துவான காட்டை சமீபித்து நிற்கின்றானே! என்னதான் குழந்தை என்று சொன்னாலும் இப்போது அவள்… அது ஓர் உயிரற்ற உடலல்லவா? பறவைகள், விலங்குகள் நடமாடும் இடத்தில் அப்படி வைத்திருக்கலாமா? குழந்தை மேல் மிகுந்த பாசம் போலும். அவளுடன் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்துகிறான் என்று புரிந்துகொள்ள முடிந்தது இவளுக்கு. ஆனாலும் இது சரியில்லையே! தான் இன்னும் அழுத்திச் சொல்லியிருக்க வேண்டுமோ? பத்திரமாக ஊர் போய் சேருவானா? இல்லை, இந்த அசாதாரண மனநிலையில், துக்க உணர்வில் ஏதேனும் செய்துகொள்வானோ?! “அய்யோ!” உடல் தூக்கிப் போட, பதறி விழித்தாள் அம்ருதா. “என்னடா அம்மு?” என்ற அண்ணனின் குரலில் நிகழ்கண...
🍪 This site uses cookies to improve your reading experience. Learn more.