அத்தியாயம் 16.2 "ஓய் தான்யாக்கா! வந்த நாலு நாளா நானும் பார்க்கறேன். ஒண்ணு அந்த ஐ ஃபோனை நோண்டிட்டு இருக்க. இல்ல லேப்புக்குள்ள தலையை விட்டுட்டு இருக்க. அப்டி என்ன பிஸினஸ் டீல் பண்ணிட்டு இருக்க? மச்சான் அதுக்குள்ள உன் கையில மேனேஜ்மென்ட்'அ மொத்தமா ஒப்படைச்சிட்டாரா?" "நீ வேற வயித்தெரிச்சலைக் கிளப்பாம போடா. அப்டியே உங்க மச்சான் என்னை நம்பி குடுத்துட்டாலும்... எனக்கு இருக்கற ஒரே என்டர்டெயின்மென்ட் இது தான்." என்று அலைபேசியைக் காட்டினாள். "ரொம்ப அலுத்துக்கற போலயே?" "ஹான்! இங்கேயும் என்னைக் கண்டுக்காம எல்லாரும் அவரவர் வேலையைப் பார்க்க போயிடறாங்க. நான் வேற என்ன பண்றதாம்?" "ஏன் அம்மா கூட ஸ்கூலுக்கு போகலாம். அப்பா கூட ஹோட்டல் போயிருக்கலாம். இல்ல அண்ணியோட ரிசார்ட்டாவது போயிருக்கலாம்." "அதுக்கு நான் இங்க இருந்து இந்த ஸ்டோரீஸே படிச்சிடுவேன்டா நந்தா." "படிக்கற காலத்துல தான் கைட்குள்ள (guide) கதை புக்கை ஒளிச்சு வச்சு படிச்சு, அம்மாகிட்ட அடி வாங்குவ. கல்யாணம் ஆனதுக்கப்புறம் கூட திருந்தலயா நீ?" "திருந்துறதுக்கு நான் என்ன குடி...